Thursday, October 07, 2010

நூல் அறிமுகம்: "அகதி வாழ்க்கை"

"அகதி வாழ்க்கை" எனும் நூல் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? அதற்கான அரசியல்-சமூக காரணி என்ன? அகதிகள் எவ்வாறான வழிகளில் ஐரோப்பிய நாடுகளை வந்தடைகின்றனர்? அவர்கள் அடைக்கலம் கோரும் நாடுகள் எவை? அடைக்கலம் கோரும் வரையிலான பயணப்பாதை என்ன? வழியில் எத்தகைய இன்னல்களை கடந்து வருகிறார்கள்? ஐரோப்பிய நாடுகளில் உள்ள அகதிகளுக்கான சட்டங்கள், அகதிகளை விசாரிக்கும் முறை எப்படி உள்ளது? அவர்களுக்கான வதிவிடப் பத்திரங்கள் எவை? தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன? புலம் பெயர்ந்த நாடுகளில் வதிவிட அனுமதி கிடைத்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளது? ஐரோப்பிய சமூகத்தில் அவர்களுக்கான இடம் என்ன? புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள்?

இது போன்ற பல அரிய தகவல்கள் அடங்கிய நூல். விலை: இந்திய ரூபாய் 100 ,- நூலை இணையத்தில் (online ) வாங்கலாம்.

https://www.nhm.in/shop/978-81-8493-477-9.html

3 comments:

  1. வாழ்த்துகள், கலையரசன், உங்கள் நூல், புலம் பெயர்ந்த தமிழர்களின் இளையோருக்கு நல்ல தகவலாக அமைவதோடு மட்டுமல்லாமல், அவர் தம் வாழ்வினால் மேம்படுத்திக் கொள்ளவும் உதவும்.

    கிழக்கு பதிப்பகத்தின் மற்றுமொரு சீரிய படைப்பாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

    ReplyDelete
  2. நன்றி, மார்க்கண்டேயன். நூலை வாங்கி வாசியுங்கள், பிறருக்கும் அறிமுகப் படுத்துங்கள்.

    ReplyDelete