"முதலாளித்துவம் தோல்வியடைந்து விட்டது. அவர்கள் இதனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தோல்விக்கான காரணங்களை ஆராயவும், தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. இப்போதும் 2007 ம் ஆண்டில் (நிதி நெருக்கடிக்கு முந்திய காலம்) வாழ்ந்து கொண்டிருப்பதாக பாசாங்கு செய்கிறார்கள்."
- இத்தாலியில் மாற்று அரசியல் இயக்கத்தை தோற்றுவித்த பிரபல பதிவர் Beppe Grillo, நெதர்லாந்து தொலைக்காட்சி (VPRO) நேர்காணலின் போது தெரிவித்த கருத்துகள்.
- இத்தாலியில் மாற்று அரசியல் இயக்கத்தை தோற்றுவித்த பிரபல பதிவர் Beppe Grillo, நெதர்லாந்து தொலைக்காட்சி (VPRO) நேர்காணலின் போது தெரிவித்த கருத்துகள்.
பெப்பே கிரிலோ ஒரு சமூக ஆர்வலர். 2007 ம் ஆண்டில் இருந்து வலைப்பூ மூலம் பல்லாயிரம் இத்தாலி இளைஞர்களின் மனங்களை வென்றெடுத்துள்ளார்.
Beppe Grillo's Blog இத்தாலி அரசுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வருகின்றது. ஐந்து வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட வலைப்பூ இன்று அறுபது மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
Beppe Grillo's Blog இத்தாலி அரசுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வருகின்றது. ஐந்து வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட வலைப்பூ இன்று அறுபது மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
நேர்காணலில் பெப்பே கிரிலோ தெரிவித்த கருத்துகளில் சில:
- இன்றைய உலகில், பொது மக்கள் ஊடகம் என்ற ஒன்று இல்லை. அனைத்தும் விளம்பரதாரரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அண்மைய வரவான இணையம் மட்டுமே சுதந்திர கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடகமாக உள்ளது.
- இன்றைய உலகில், பொது மக்கள் ஊடகம் என்ற ஒன்று இல்லை. அனைத்தும் விளம்பரதாரரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அண்மைய வரவான இணையம் மட்டுமே சுதந்திர கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடகமாக உள்ளது.
- இத்தாலியர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அனைத்து தீமைகளையும் அவர்கள் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் முதலாவது வங்கி இத்தாலியில் தான் உருவானது. இத்தாலியர்கள் தான் பாசிசத்தையும் கண்டுபிடித்தார்கள்.
- தற்போதைய இத்தாலி ஜனாதிபதி பெர்லுஸ்கோனி விபச்சார தரகு அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார். இத்தாலியின் பிரதான ஊடகங்கள் பெர்லுஸ்கோனி எவ்வாறு உடலுறவு கொள்கிறார், எப்படி விந்து வெளியேற்றுகிறார், என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. எமக்கு அதெல்லாம் தேவையில்லை.
- எமது இயக்கத்திற்கு என்று ஒரு யாப்பு கிடையாது. தலைவர், செயலாளர் யாரும் இல்லை. பணப் புழக்கம் இல்லாத படியால் பொருளாளரும் கிடையாது. இது ஒரு வலைப்பின்னல். நோபல் பரிசு வென்றவர் முதல் சாதாரண தொழிலாளி வரை சமமாக கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். தமது சுற்றாடலில் நடக்கும் சமூகப் பிரச்சினைகளை விவாதிக்கின்றனர்.
- இது ஒரு மக்கள் இயக்கம். தேர்தலில் போட்டியிடும் கட்சியல்ல.
நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள்... வலைப்பூ மூலமும் சில நல்லத் துவக்கங்கள் வரலாமென! இதயப் பூர்வமான நன்றிகள்!
ReplyDeleteஒரு கம்யுனிச நாட்டில் யாராவது இப்படி வெளிப்படையாக விமர்சிக்கமுடியுமா?
ReplyDeleteராபின், முதலில் நீங்கள் முதலாளித்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு அப்புறம் கம்யூனிசம் பற்றி படிக்கலாம். இன்றைக்கு இருப்பது திறந்த சந்தைப் பொருளாதாரம் என்று அழைக்கப் படுகின்றது. (நூறு வீத தாராளம் இருக்க முடியாது.) அங்கே அனைத்தும் விற்பனைப் பண்டங்கள் தான். கட்டுப்பாடு கிடையாது. விமர்சனத்திற்கு கிடைக்கும் சுதந்திரமும் அது போலத் தான். யாரும் எதையும் கூறட்டும், அதெல்லாம் விற்பனையாகின்றது என்றால் முதலாளித்துவம் வளரும் அல்லவா?
ReplyDeleteஎது எப்படியோ,"வலைப்பூ" என்ற ஒரு வரப்ரசாதம் நமக்கு கிடைத்துள்ளது. இதனால் நம் நாட்டில்
ReplyDeleteநிறைய சாதிக்கலாம் என்ற நம்பிக்கை துளியூண்டு வருகிறது. இங்குள்ளவர்கள் எல்லோரும் மனது வைத்து ஒருமுகபட்டால் மட்டும் இதயனை நாம் சாதிக்கலாம்.
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் ஓசி blog ம் முதலாளித்துவம் கொடுத்ததுதான்...
ReplyDeleteஉங்களை மாதிரி communist கள் ஒரு உதவாக்கரைகள் எதையுமே கண்டுபிடிக்கமாட்டீர்கள் அடுத்தவன் செய்வதில் குறை குற்ரம் காண்பதில்தான் முழு நேரமும் செலவிடுவீர்கள்...
கலை,
ReplyDeleteஎனக்கு தெரிந்தவரை தமிழ் பதிவுலகில் கம்யுனிஸ்டுகள் முதலாளித்துவத்தைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறார்களே தவிர யாரும் கம்யுநிசத்தைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. முதாலாளித்துவத்திற்கு எதிரான கட்டுரைகளையே படித்து படித்து சலித்து விட்டது. ஏன் தோழர்கள் கம்யுநிசத்தைப் பற்றி எழுதக்கூடாது? கம்யுனிசம் தோல்வி அடைந்துவிட்டது என்றே பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஏன் கம்யுனிசம் இந்த காலத்திற்கு எப்படி பொருந்தும் என்பதை பற்றி எழுதக்கூடாது?
ஒருவன் முதலாளித்துவத்தை விமர்சிக்கிறான் என்பதற்காக அவன் கம்யூனிஸ்டாக இருக்கவேண்டும் என்பதில்லை,
ReplyDeleteஅடுத்து இன்று முதலாளித்துவத்தின் நவீன பரிமாணம், நாம் எவ்வாறு சந்தைகளுக்கு அடிமையாக்கப்படுகிறோம் என்று உணராத அளவிற்கு நம்மை அடிமையாக்கிக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு fair trade என்று சொல்லும்போது ஏதோ எல்லாமே fair ஆக நடப்பதாக நினைப்போம், ஆனால் fair tradeன் கீழ் என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கவேண்டும்,,,,
கலையரசன், தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை வாசித்துவருகிறேன், உங்கள் விரிவான பகிர்வுகளுக்கும், அவற்றின் பின்னால் இருக்கின்ற ஆழ்ந்த உழைப்பிற்கும் நன்றிகள்
we dont want any communism or capitalism. in any company should like this only.
ReplyDeletegovt 33%
empoloyees 33%
public 33%
others 1%
this combination will avoid all losses. it will give real gain.
ramalingam s mysore.
My opinion is that both capitalism and communism are not bad, but question is who promote them. If a leader promote, it will be best. But if a politician promote, it will be hell. This is what we see.
ReplyDeleteராபின், உங்களைப் பொறுத்த வரை கம்யூனிசம் என்பது கடந்த காலம், அல்லது செத்த பிணம். அப்புறம் எதற்காக இப்போதும் கம்யூனிசத்தை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? எப்போதும் கம்யூனிசத்தை திட்டுவதால் உங்களுக்கு சலிப்பு ஏற்படவில்லையா? ஒரு வேளை செத்துப் போன கம்யூனிசத்தின் ஆவி உங்களை அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருக்கின்றதா? ஒரு முறை உங்கள் வழியிலேயே சிந்திப்போம். இனிமேல் திரும்பி வராத கம்யூனிசத்தை மறந்து விட்டு, என்றென்றும் நிலைத்து நிற்கும் முதலாளித்துவத்தை விமர்சிப்பதில் தவறென்ன?
ReplyDeleteகலை,
ReplyDeleteஉங்கள் பதிலை நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்கிறேன்.
உங்களிடம் மட்டுமல்ல பல தோழர்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். எல்லாரும் முதலாளித்துவத்தைப் பற்றி மாங்கு மாங்கு என்று எழுதுகிறார்களே தவிர கம்யுனிசத்தை தொடுவதில்லை.
முதலாளித்துவத்தை பற்றி மக்கள் அனுபவரீதியாகத் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். இதற்காக ஐரோப்பா எல்லாம் சென்று ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஆனால் முதலாளித்துவத்தை விட்டால் மாற்று வழி என்ன? கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவமே சிறந்தது என்பதுதான் எனது புரிதல்.
ராபின், சிரித்து விட்டுப் போக இது ஒன்றும் நகைச்சுவைத் துணுக்கு அல்ல. உங்களதும், பல கோடி மக்களினதும் வாழ்வாதாரப் பிரச்சினை. உங்களுக்கு முதலாளித்துவம் ஏற்புடையதாக இருக்கலாம். உங்களுடைய சமூகப் பின்னணி உங்களை அப்படித் தான் பேச வைக்கும். அதற்கு காரணம் நீங்கள் சார்ந்துள்ள வர்க்கம். இது ஒன்றும் ஜோசியம் அல்ல. சமூக விஞ்ஞானம். உங்களது குடும்பத்தின் வசதி வாய்ப்பு, சம்பாதிக்கும் அளவு, சமூக அந்தஸ்து இவை யாவும் உங்கள் அரசியலையும் தீர்மானிக்கின்றன.
ReplyDeleteநீங்களே கூறியுள்ளீர்கள் முதலாளித்துவத்தை மக்கள் அனுபவரீதியாக அறிந்து வைத்திருப்பதாக, அதாவது அறிவுபூர்வமாக அல்ல. உங்களைப் போன்ற புத்திஜீவிகள் அதனை அறிவு ரீதியாக அறிந்து கொள்ள முயற்சிக்கலாமே? கட்டுப்படுத்தப் பட்ட முதலாளித்துவமே சிறந்தது என்று சொல்லும் போதே அதில் குறைகள் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றீர்கள். ஆனால் மாற்று இல்லை என்பதற்கு காரணம், உங்களது இருப்பு பற்றிய பயம். எங்கே இப்போதுள்ள வசதி வாய்ப்புகள், வருமானம் எல்லாவற்றையும் இழந்து விடுவேனோ என்ற பயம். சொத்துகளை சேர்த்து வைத்திருப்பவன் மரணத்திற்கு அஞ்சுவான் என்று இந்திய தத்துவவியலே கூறுகின்றது.
முதலாளித்துவத்தின் வளர்ச்சியடையும் பொழுது சோஷலிசமும், சோஷலிசத்தின் வளர்ச்சியில் கம்யூனிசமும் உருவாகிறது என்று நீங்கள் படிக்கவில்லையா?
உங்களைப் போன்ற பலருக்கு முதலாளித்துவம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாத போது கம்யூனிசம் பற்றி சொல்லிக் கொடுத்து என்ன பிரயோசனம்? ஆரம்ப பாடசாலையில் ஒழுங்காக படிக்காத மாணவனுக்கு எடுத்த எடுப்பில் உயர்தர வகுப்பு பாடங்களை போதிக்க முடியுமா?
//கட்டுப்படுத்தப் பட்ட முதலாளித்துவமே சிறந்தது என்று சொல்லும் போதே அதில் குறைகள் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றீர்கள்.// ஆம்.
ReplyDelete// ஆனால் மாற்று இல்லை என்பதற்கு கார
ணம், உங்களது இருப்பு பற்றிய பயம்.// இதுவும் உண்மைதான். ஒரு சர்வாதிகார ஆட்சியில் கேள்வி முறையில்லாமல் சிறையிலடைக்கப்படவோ கொல்லப்படவோ விரும்பவில்லை.
//எங்கே இப்போதுள்ள வசதி வாய்ப்புகள், வருமானம் எல்லாவற்றையும் இழந்து விடுவேனோ என்ற பயம். // அப்படி நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் வசதியாக இல்லை.
//எங்கே இப்போதுள்ள வசதி வாய்ப்புகள், வருமானம் எல்லாவற்றையும் இழந்து விடுவேனோ என்ற பயம். // வரலாறு வேறு மாதிரி சொல்கிறதே?
//உங்களைப் போன்ற பலருக்கு முதலாளித்துவம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாத போது கம்யூனிசம் பற்றி சொல்லிக் கொடுத்து என்ன பிரயோசனம்? ஆரம்ப பாடசாலையில் ஒழுங்காக படிக்காத மாணவனுக்கு எடுத்த எடுப்பில் உயர்தர வகுப்பு பாடங்களை போதிக்க முடியுமா? // இது வெறும் சமாளிப்புதான். உங்களுக்கே கம்யுநிசத்தின்மேல் முழு நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் தயங்குகிறீர்கள்.
ராபின், கம்யூனிசத்தின் மீது யாரும் நம்பிக்கை வைக்கத் தேவையில்லை. அது தானாகவே ஏற்படும் விஞ்ஞான மாற்றம். ஒரு காலத்தில் உலகில் சாதாரணமாக காணப்பட்ட மன்னராட்சி இன்று இல்லை. அதே போலத் தான் முதலாளித்துவம் ஒரு நாள் முடிந்து போகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. மாற்றங்களை
ReplyDeleteஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒருவரால் எப்படி எதிர்காலத்தை புரிந்து கொள்ள முடியும்? ராபின், முதலில் ஒன்றை தெளிவாக கூறுங்கள். நீங்கள் ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வருகின்றீர்களா? அல்லது என்னைப் போன்றவர்களை நையாண்டி செய்து சுய இன்பம் அடைகின்றீர்களா?
ராபின், சர்வாதிகார ஆட்சி, கேள்விமுறையின்றி சிறையில் அடைப்பது என்பன எல்லாம் ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தின் அரசியல் எதிரிகள் பாவிக்கும் வார்த்தைகள். சிங்கப்பூரிலும் சர்வாதிகார ஆட்சி தான், அரசியல் எதிரிகள் சிறையில் இருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் நீங்கள் பார்ப்பதில்லையே? மேற்குலக நாடுகள் தாம் நாகரீகமடைந்தவர்களாக காட்டிக் கொள்வதற்காக கடுமையாக நடந்து கொள்வதில்லை. இருப்பினும் 11 செப்டம்பர் 2001 க்கு பிறகு நிலைமை மாறி விட்டது. எத்தனையோ அப்பாவி முஸ்லிம்களை கேள்விமுறையின்றி சிறைகளில் அடைத்து வைத்துள்ளார்கள். உடனே அவர்கள் பயங்கரவாதிகள் என்று நியாயம் கூறிக்கொண்டு வருவீர்கள். பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை பற்றி உங்களுக்கு கவலை இல்லை. எந்தவொரு அரசாங்கமும் தனக்கு எதிராக வன்முறை பிரயோகிப்பவர்களை பயங்கரவாதி என்று தான் சொல்லும். நீங்கள் கம்யூனிச நாட்டில் வாழ்ந்து கொண்டு, அந்த அரசுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால், உங்களை சிறையில் அடைக்காமல் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து உபசரிப்பார்களா?
ReplyDelete//நீங்கள் கம்யூனிச நாட்டில் வாழ்ந்து கொண்டு, அந்த அரசுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால், உங்களை சிறையில் அடைக்காமல் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து உபசரிப்பார்களா? // தியான்மென் சதுக்கத்தில் அமைதியாகத்தானே போராடினர்? அவர்களெல்லாம் பயங்கரவாதிகளா? ஏன் டாங்கிகளால் நசுக்கிக் கொல்லப்பட்டனர்.
ReplyDelete// தியான்மென் சதுக்கத்தில் அமைதியாகத்தானே போராடினர்? அவர்களெல்லாம் பயங்கரவாதிகளா? ஏன் டாங்கிகளால் நசுக்கிக் கொல்லப்பட்டனர்.//
ReplyDeleteதியாநேன்மேன் சதுக்கத்தில் இருந்தவர்கள் முதலில் அமைதியாக தான் போராடினார்கள். ஆனால் இறுதியில் வன்முறையில் இறங்கினார்கள். அந்த செய்தியை உங்களுக்கு தெரிவிக்காமல் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிஸ் கவச வாகனங்களை எரித்த படங்களை நீங்கள் பார்க்கவில்லையா? நீங்கள் எதற்காக இந்த இடத்தில் மட்டும் நடுநிலை தவறுகின்றீர்கள்?
//அந்த செய்தியை உங்களுக்கு தெரிவிக்காமல் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன.
ReplyDeleteஆர்ப்பாட்டக்காரர்கள் போலிஸ் கவச வாகனங்களை எரித்த படங்களை நீங்கள் பார்க்கவில்லையா?// இதில் இருக்கும் முரண்பாடு உங்களுக்கு தெரிகிறதா? சரி வன்முறையில் ஈடுபட்டதாகவே இருக்கட்டும், அதற்காக டாங்கிகளை வைத்து நசுக்கிக் கொள்ளும் அளவிற்கு போகவேண்டுமா?
Robin, யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகள் டாங்கிகள் ஏற்றி பல மக்களைக் கொன்றுள்ளன. அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளோடு பேசியிருக்கிறேன். இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் எத்தனையோ பேர் தாங்கி ஏற்றி கொல்லப்பட்டனர். உலகில் எந்த நாட்டு இராணுவம் என்றாலும் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றது. தங்களை மனிதாபிமான ஜனநாயகவாதிகள் என்று கருதிக் கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் தான் நடுநிலை தவறுகின்றீர்கள். உங்கள் அரசியலுக்கு சார்பான இராணுவம் மக்களை டாங்கி ஏற்றிக் கொல்லலாம். அதனை நீங்கள் கண்டு கொள்ள மாட்டீர்கள். ஒரு நாளும் அதைப்பற்றி பேச மாட்டீர்கள்.
ReplyDeleteசரி எல்லா இடத்திலும் இப்படி நடக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். கம்யுனிச நாடுகளில் மட்டும் ஏன் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன? எதற்காக இந்த இரும்புத்திரை?
ReplyDeleteRobin, நீங்கள் கம்யூனிசம் பற்றிய நிறைவான அறிவோடுதான பேசுகிறீர்களா? மறுபக்கம் பற்றி தெரியாத வரை அது பற்றிய பயம் என்பது சகஐம்தான். நீங்கள் எந்த வகையோ நான் அறியேன். எனக்கு கம்யூனிசம் மீது எந்த காதலும் இல்லை. ஆனால் சில உண்மைகள் கம்யூனிசம் பற்றிய மதிப்பை உயர்த்துகின்றன.
ReplyDeleteகலையரசன், கம்யூனிசம் பெரியளவிற்கு அற்புதமானது அல்ல. அங்கும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. (உ+ம்) ஆட்சியிலிருப்பவர்கள் அனுபவிக்கலாம் ஆனால் பாமர மக்களுக்கு அந்த வசதியில்லை.
// தியான்மென் சதுக்கத்தில் அமைதியாகத்தானே போராடினர்? அவர்களெல்லாம் பயங்கரவாதிகளா? ஏன் டாங்கிகளால் நசுக்கிக் கொல்லப்பட்டனர்.//
ReplyDelete//உங்கள் அரசியலுக்கு சார்பான இராணுவம் மக்களை டாங்கி ஏற்றிக் கொல்லலாம்.//
வன்முறையைப் பயன்படுத்துவது, கொலை செய்வது என்பன மனித சமூதாயத்தின் அநாகரீகங்கள். யார் செய்தாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
//சரி எல்லா இடத்திலும் இப்படி நடக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். கம்யுனிச நாடுகளில் மட்டும் ஏன் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன? எதற்காக இந்த இரும்புத்திரை?//
ReplyDeleteராபின், முதலில் உங்கள் மனதின் மீது போட்டிருக்கும் இரும்புத்திரையை விலக்கிப் பாருங்கள். நான் நினைக்கிறேன், நீங்கள் பேசுவது உங்களுக்கே புரிவதில்லை என்று. எல்லா நாடுகளிலும் இரும்புத்திரையும், இருட்டடிப்பும் நடப்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். பின் எதற்கு கம்யூனிச நாடுகளை பற்றி மட்டும் அதிக அக்கறைப் படுகின்றீர்கள்? நான் சோஷலிச நாடுகளின் அரசாங்கங்கள் செய்வது சரி என்று சொல்லவில்லை. அரசாங்கம் என்பது ஒரு அதிகார மையம், அது முதலாளித்துவ நாடாக இருந்தாலும், சோஷலிச நாடாக இருந்தாலும் அரச இயந்திரம் தனக்குரிய குணத்தை காட்டும். தனக்கு எதிரான இன்னொரு பிரிவினரை அடக்கும். நீங்கள் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர் என்பதால், கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தால் சிறையில் போட்டு விடுவார்களோ என்று பயந்து நடுங்குகிறீர்கள். உங்களது வர்க்க நலனை என்றென்றும் பாதுகாப்பதற்காக கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றீர்கள். வாழ்க.