Tuesday, September 21, 2010

இஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்

"இஸ்ரேலை யூத இனத்தவருக்கான நாடாக ஏற்றுக் கொண்டு விசுவாச சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்", என்ற சட்ட மசோதா தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது. தீவிர வலதுசாரிக் கட்சியான Yisrael Beiteinu வின் நாடாளுமன்ற உறுப்பினர் David Rotem இந்த பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டம் அமுலுக்கு பட்சத்தில், இஸ்ரேலில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் "விசுவாச சத்தியப் பிரமாணம்" எடுக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது. இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் இருபது வீதமானோர் பாலஸ்தீன பிரஜைகள். அவர்களின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் முகமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீன-அரபு சிறுபான்மை இன மக்கள், இஸ்ரேலின் யூத பேரினவாதத்தின் கீழ் அடிபணிவதாக சத்தியம் செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் சட்டப்படி குடியுரிமைகளை இழப்பார்கள். (பார்க்க:Palestinians may soon have to swear loyalty to 'Jewish' state)

ஒவ்வொரு பிரஜையும் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்:
"நான் ஹாஷேம் (யூத கடவுள்) பெயரால் உறுதிமொழி எடுக்கிறேன். யூத தேசமான இஸ்ரேலுக்கும், அதனது தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், இராணுவத்திற்கும் எனது நிபந்தனையற்ற விசுவாசத்தை வழங்குகிறேன். யூத தேசத்தின் விசுவாசியாக எந்த நேரத்திலும் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன்."

நாஜி ஜெர்மனியில் ஒவ்வொரு பிரஜையும், ஜெர்மன் தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்களை வேட்டையாடிய மக்கார்த்தி சட்டம், ஒவ்வொரு பிரஜையும் அரச விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்தித்தது. இலங்கையில் ஈழப்போர் ஆரம்பமான காலத்தில், அரசாங்க ஊழியர்கள் "பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாகவும்" சத்தியப் பிரமாணம் எடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். இந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. முன்னொரு தடவை வட-கிழக்கு மாகாணங்களில் தெரிவான ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த உறுதிமொழி எடுக்க மறுத்ததால் தமது பதவிகளை இழந்தார்கள். இப்போதுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், "பிரிவினைக்கு எதிரான" உறுதிமொழி எடுக்காமல் பதவிகளை தக்க வைத்திருக்க முடியாது.

இன்றைக்கும் இஸ்ரேலின் யூத பேரினவாத அரசுக்கு, நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தமிழர்கள் இருப்பது வேதனைக்குரியது. இஸ்ரேலின் உதாரணத்தை பின்பற்றி, "சிறிலங்கா என்ற சிங்கள-பௌத்த தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்குமாறு" இலங்கை அரசு சட்டம் கொண்டு வராதா? அப்போது இலங்கையில் வாழும் 20 வீதமான தமிழ் சிறுபான்மையினரின் நிலைமை என்னவாகும்?

பாசிச சட்ட மசோதாவிற்கு இஸ்ரேலியர்கள் எந்த அளவிற்கு ஆதரவு வழங்குகின்றனர்? இதை அறிவதற்காக எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பு வீடியோவை ஒரு தடவை பார்வையிடவும்.

21 comments:

  1. இப்படித்தான் நாட்டுபற்றுடன் இருக்கணும். இஸ்ரேலியர்களை பாராட்டுகிறேன்.

    முஸ்லிம்களுக்கு,கிறிஸ்தவர்களுக்கு, பவுத்தர்களுக்கு, கடைசிக்கு இந்துக்களுக்கு எல்லாம் நாடு உண்டு. அப்புறம் யூதர்களுக்கு நாடு வேண்டாமா? இன்றைக்கும் அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்கள் குடிமக்களாக முடியாது. இஸ்ரேலை யூதமத நாடாக அறிவிக்க இஸ்ரேலிய மக்களுக்கு முழு உரிமை உண்டு.

    ReplyDelete
  2. ஏனைய மதத்தவருக்கு எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இதானே நிலைமை. அதை தான் இஸ்ரேல் பின்பற்றுகிறது. மதத்துக்கு ஒரு நீதியா.
    மதத்தின் மீது தீவிர பற்று வைப்பதற்கு முஸ்லீம்களே வழி சொல்கிறார்கள்.

    ReplyDelete
  3. //இப்படித்தான் நாட்டுபற்றுடன் இருக்கணும். இஸ்ரேலியர்களை பாராட்டுகிறேன்.//

    இப்படித்தான் பௌத்த - சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருக்கணும் என்று ஈழத்தமிழருக்கு எடுத்து சொல்வீங்களா?

    ReplyDelete
  4. There is no country called ISRAEL before 1947. The land is land of Palestine people. If they Jews asks or forcedly take one of our state in India, will we allow? considering as they don't have any land..,

    ReplyDelete
  5. --இப்படித்தான் பௌத்த - சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருக்கணும் என்று ஈழத்தமிழருக்கு எடுத்து சொல்வீங்களா?--------

    ஜனநாயக பாதைக்கு திரும்பு, இஸ்லாமிய சட்டங்களை விடு என அரேபியா,ஈரானுக்கு நீங்க அறிவுரை சொல்லுவீங்களா? நீங்க சொல்கிறீர்களோ இல்லையோ கலையரசன் சொல்லுவாரா?

    ReplyDelete
  6. //இப்படித்தான் பௌத்த - சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருக்கணும் என்று ஈழத்தமிழருக்கு எடுத்து சொல்வீங்களா?//

    நீங்கள் தமிழர்கள் (பலர்) சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு எப்படி இந்த கேள்வியை கேட்கலாம்? முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்(?) சொல்லுங்கள்.

    ReplyDelete
  7. //நீங்கள் தமிழர்கள் (பலர்) சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு எப்படி இந்த கேள்வியை கேட்கலாம்?//

    இஸ்ரேலுக்கும் சிங்கள அரசுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கிறீங்க?

    ReplyDelete
  8. //இஸ்ரேலுக்கும் சிங்கள அரசுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கிறீங்க?//

    இஸ்ரேலுக்கு எப்போதும் என் ஆதரவு இருக்கும்.

    நீங்கள் தமிழர்கள் (பலர்) சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு எப்படி இந்த கேள்வியை கேட்கலாம்? முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்(?) சொல்லுங்கள்.

    ReplyDelete
  9. //இஸ்ரேலுக்கு எப்போதும் என் ஆதரவு இருக்கும்.//

    சிங்கள அரசுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு இருக்கும்.

    ReplyDelete
  10. //சிங்கள அரசுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு இருக்கும்.//

    I hope you support to sri lanka. That's why you try state on behalf of me. I said I support Israel, not sri lanka.

    ReplyDelete
  11. //They don’t want your land. They want their land ISRAEL.//

    அந்நிய நாட்டில் இருந்து வந்து குடியேறிய யூதர்களுக்கு அந்த உரிமை இல்லை.

    ReplyDelete
  12. //I support Israel, not sri lanka.//
    NONSENSE. WHEN YOU SUPPORT ISRAEL, YOU ALSO SUPPORT SRI LANKA. WHAT IS THE DIFFERENCE BETWEEN ISRAEL AND SRILANKA? ARE YOU A TAMILAN?

    ReplyDelete
  13. //அந்நிய நாட்டில் இருந்து வந்து குடியேறிய யூதர்களுக்கு அந்த உரிமை இல்லை//

    கி.மு 70 பின் யூதர்கள் இஸ்ரேலைவிட்டு வெளியேறினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? கி.மு. 1030 - கி.மு 586 வரையான யூத இராட்சியம் பற்றிக் கேள்விப்படவில்லையா? இப்போது இருக்கும் Dome of the Rock யூதர்களில் கி.மு. 957இல் கட்டப்பட்ட தேவாலயத்தின் அழிவின்மேல் கட்டப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

    ReplyDelete
  14. //NONSENSE. WHEN YOU SUPPORT ISRAEL, YOU ALSO SUPPORT SRI LANKA. WHAT IS THE DIFFERENCE BETWEEN ISRAEL AND SRILANKA? ARE YOU A TAMILAN?//

    How dare you have to use the word nonsense? Do you know how to behave in public forum? It clearly tells me that how uneducated person you are. So, how can you understand the different between Israel and sri lanka?

    ReplyDelete
  15. யூதர்களும் தமிழர்களும் ஒரே மாதிரியான வரலாற்றைக் கொண்டவர்கள். யூத கலாச்சாரமும் தமிழரின் கலாச்சாரமும் ஒன்று. முஸ்லிம் நாடுகளை அடக்கியாண்ட இஸ்ரேலுக்கு தமிழரின் ஆதரவு எப்போதும் இருக்கும்.

    ReplyDelete
  16. பாபிலோன் இராட்சியம்
    பாரசீக இராட்சியம்
    கிரேக்க இராட்சியம்
    உரோம இராட்சியம்
    அரபு கலிப்பாக்கள்
    சிலுவைப் போர் வீரர்கள்
    எகிப்து சுல்தான்கள்
    துருக்கி ஓட்டமான்கள்
    நாஸி ஜேர்மனி
    பெரிய பிரித்தானிய
    அரபு நாடுகள்
    இன்னும் பலர்
    யூதர்களை அழிக்க நூற்றாண்டுகளாக முயன்றார்கள் முயலவில்லை.

    ஹமாஸ், ஹிஷ;புல்லா போன்ற தீவிரவாத இயக்கங்கள் மற்றும் உலகமெங்குமுள்ள யூத எதிர்ப்பாளர்கள் அழிக்க முயல்கிறார்கள். அதுவும் முடியாது. யூத எதிர்ப்பாளர்கள் வரிசையில் கலையகமும் சேர்ந்துள்ளது. கலையகமும் ஒன்றும் செய்ய முடியாது.

    ஏன் யூதர்களை அழிக்க முடியாது என்பதற்கான உண்மைக் காரணத்தை அறியாத வரை பலர் வந்து போவார்கள், இஸ்ரவேல் மட்டும் நிலைத்திருக்கும்!

    אלוהים של ישראל הוא אדיר

    ReplyDelete
  17. I love Israel.

    ReplyDelete
  18. Jews=Tamils
    Israel=Tamileelam
    Long live Israel and Tamileelam

    ReplyDelete
  19. //Jews=Tamils
    Israel=Tamileelam
    Long live Israel and Tamileelam//

    This is too full of dreams

    ReplyDelete
  20. இஸ்ரேலியர்களை பாராட்ட வேண்டும் அன்று அவர்களுக்கு தேவைப்பட்டது ஒரு பாதுகாப்பான இடம். அன்று கரம் கொடுத்து இடம் கொடுத்தவர்களும் இவர்கள் கையில் இடமும் இவர்கள் கையில். மனதை இறுக்கிக் கொண்டு இவர்களை பாராட்ட வேண்டும்.

    ReplyDelete