கொழும்பு நகரில் ஆடிவேல் திருவிழாவில் ரத பவனி வந்த முருகப் பெருமான், ஜனாதிபதி மாளிகைக்கு நேரில் சென்று ராஜபக்ஷவுக்கு முதல் மரியாதை வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடிகை அசினின் யாழ்ப்பாண விஜயத்திற்கு தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. தமிழருக்கு துரோகம் செய்த அசின் மீதான கண்டன அறிக்கைகள் நாலா பக்கமும் இருந்து பறந்து வந்தன. ஆனால் முருகப் பெருமான் மீது மட்டும் எந்தவொரு கண்டன அறிக்கையும் காணோம். "தமிழர்கள் முருகனின் திருவிழாக்களை பகிஷ்கரிக்க வேண்டும். பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு செல்லக்கூடாது." என்று தடையுத்தரவு எதுவும் வரவில்லை. இது கடவுளோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்று பயந்து ஒதுங்கி விட்டார்களா?
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்து இப்போது தான் ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் முருகனுக்கு இந்த கோலாகலமான ஆடி வேல் திருவிழா தேவையா? அதுவும் யுத்தம் காரணமாக கடந்த 15 வருடங்களுக்காக தடைப் பட்டிருந்த திருவிழா அது. கந்தன் ரத பவனி வரும் பாதை கொழும்பின் அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், பாதுகாப்புக் காரணங்களைக் கூறி திருவிழா தடுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகை, இராணுவத் தலைமையகம், மத்திய வங்கி, அமைச்சகங்கள், தூதுவராலயங்கள் ஆகியனவற்றைக் கொண்ட கொழும்பின் இதயப் பகுதி என்பதால் அத்தனை கெடுபிடி. 15 வருடங்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றின் பின்னர் தான் ஆடி வேல் ஊர்வலம் தடுக்கப்பட்டது. இருப்பினும் வன்னிப் பேரவலம் இடம்பெற்று யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த வருடம் ஆடி வேல் திருவிழா விமரிசையாக கொண்டாடப் பட்டது. தனது திருவிழா மீண்டும் நடப்பதற்கு நன்றிக்கடனாக, முருகப்பெருமான் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி முதல் மரியாதை செய்ததை, தமிழ்த் தேசியக் காவலர்கள் எவ்வாறு பொறுத்துக் கொண்டார்கள்?
"ஆடி வேல் இரதத்தில் பவனி வந்தது ஒரு வெண்கலச் சிலை." என்று ஒரு நாஸ்திகன் கூறலாம், ஆனால் இந்து மதத்தை நம்பும் தமிழர்களுக்கு முருகன் எல்லாம் வல்ல இறைவன். முருகனின் பெயரில் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி முதல் மரியாதை செய்த கோயில் தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள் இதே இந்துக்களின் மதிப்புக்குரியவர்கள். தமிழ் தேசியவாதிகள் முருகன் என்ற கடவுளை பகைத்துக் கொள்ள விரும்பாதிருக்கலாம். (மயில் மீதேறி வந்து வேலாயுதத்தை வீசி விட்டால்? நமக்கேன் வம்பு.) ஆனால் தர்மகர்த்தாக்கள் என்ற மனிதர்களை நோக்கி கண்டனக் குரல்களை எழுப்பியிருக்கலாம். ஆலய தர்மகர்த்தாக்களும், ஆடி வேல் திருவிழாவுக்கு நிதி வழங்குவதும் பிரபல தமிழ் வர்த்தகப் புள்ளிகள். கொழும்பு நகரில் நகைக் கடைகளின் வீதியான செட்டித் தெரு முதலாளிகள். கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் இருந்து வந்து நகை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் செட்டியார்கள். பலருக்கு கொழும்பில் மட்டுமல்ல சென்னையிலும் கடைகள் இருக்கின்றன.
செட்டித்தெருவில் நகைக் கடையில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் கூறினார். ஆடி வேல் திருவிழா செலவுகளுக்காக அனைத்துக் கடைகளிலும் நிதி சேர்க்கிறார்கள். நகை ஆபரணங்களை வடிவமைத்துக் கொடுக்கும் சிறு தொழில் முனைவர் கூட குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்கிறார். பெரிய முதலாளிகள் லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிறார்கள். அந்த தெருவில் மொத்தம் ஆயிரம் கடைகளுக்கு குறையாமல் இருக்கும். ஒரு திருவிழாவுக்கு மட்டும் எவ்வளவு பணம் வசூலாகி இருக்கும் என்று நீங்களே கணக்குப் பாருங்கள். இதற்கிடையே ஆடி வேல் திருவிழாவை "உத்தியோகபூர்வமாக" பொறுப்பெடுத்து நடத்தும் சம்மாங்கோடு சிறி கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் வருமானம் தனியானது.
ஆடி வேல் திருவிழா இலங்கைத் தீவின் பழமை வாய்ந்த பாரம்பரிய விழாக்களில் ஒன்று. 1874 தொடக்கம் அது நகைக்கடை முதலாளிகளின் செலவில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதை விட புடவை வியாபாரம், இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய தமிழ் முதலாளிகளும் ஆடி வேல் திருவிழாவுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். அதற்கு சாட்சியமாக வீரகேசரி பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரமும் கொடுத்து விடுகின்றனர். சில நேரம் தமது சாதி அடையாளத்தைக் காட்டியே விளம்பரம் செய்கின்றனர். காமராஜரின் பிறந்த நாளை இலங்கையில் வர்த்தகம் செய்யும் நாடார் சமூகத்தினர் நினைவு கூர்வது ஒரு உதாரணம். இந்திய முதலாளிகள், இலங்கையில் நகை வியாபாரத்தில் மட்டும் ஈடுபடவில்லை. இந்திய புடவை வகைகள், இரும்பு, உலோகம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்து விற்பதிலும் அவர்களின் ஆதிக்கம் தான். கடந்த 30 வருட காலமாக ஓயாத போர், அவர்களின் வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டிருந்தது. தற்போது தமது வணிக சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க தடையேதும் இல்லை என்ற சந்தோஷத்தில் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தியிருப்பார்கள்.
இதிலே கவனிக்கப்பட வேண்டிய அம்சம் தமிழ் தேசியவாதிகளின் வெற்று அறிக்கைப் போர்கள். அவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகக் கருதும் எல்லோரையும் எதிர்ப்பார்கள், தமிழ் முதலாளிகளைத் தவிர. கூலிக்கு மாரடிக்கும் நடிகர்கள் இலங்கை செல்லக் கூடாது என்று "பத்வா" விதிப்பார்கள். ஆனால் பகிரங்கமாக இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் இந்திய/தமிழ் முதலாளிகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தமிழ் தேசியவாதிகள் உண்மையிலேயே இலங்கை அரசை கவிழ்க்க விரும்பினால் வேறொன்றும் செய்ய வேண்டாம். இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய தமிழ் முதலாளிகளை தடுத்தாலே போதும். இலங்கையின் பொருளாதாரம் எப்போதோ ஆட்டம் கண்டிருக்கும்.

கலையகத்தின் அடி முட்டாள் வாதம் முருகன் அருள்பாளித்தார் என்றால் முருகனுக்கு எதிராக கொடி பிடிக்கலாம் !
ReplyDeleteஆனால் முருகனை வைத்து பிழைக்கும் கோயில் நிர்வாகத்தை அல்லவா விமர்சிக்கவேண்டும் !
அதை விட்டு இல்லாத முருகனைச் சேர்த்து இழுத்து அசின் விசுவாசத்தை பூசி மெழுகுகின்றீர்கள் !
இதைத் தானோ கேட்கின்றவன் கேனயன் என்றால் எருமை மாடு ஏறப்பிளேன் ஒட்டிச்சுதான்
அசினுக்காக பிசினாக உழைக்கின்றீர்கள்
ReplyDeleteஏம்பா கலை..
ReplyDeleteசும்மா எதுக்கு "பத்வா" என்று இந்த வசனத்தை பாவிக்கிறீகள் (முஸ்லிம்களை வம்புக்கு இலுப்பதில் கலையகமும் விதிவிலக்கு இல்லை போல் தெரிகிறது).
அசினுக்கு தான் தேவையற்ற எதிர்ப்பை செய்கிறார்கள்.கடவுள், முதலாளிகள் என்று வந்தால் பேசாமல் ஒதுங்கி விடுவார்கள் புலி ஆதரவாளர்கள்.
ReplyDelete°இனப்படுகொலை நடந்து இப்போது தான் ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் முருகனுக்கு இந்த கோலாகலமான ஆடி வேல் திருவிழா தேவையா? °
இது என்ன கேள்வி? புலி ஆதரவாளர்களே வெளிநாடுகளில் கொண்டாட்டங்கள் செய்கிறார்களே.
அட முருகன் தமிழ் கடவுளா? அப்போ கதிர்காமம் எப்படி கதரகம ஆனது. இது கொலைவெறியனுக்கு இந்திய நாடார்கள் வியாபரிகள் தரும் அச்சம் நிறைந்த மரியாதை. அல்லது வெள்ளைவான் சமாச்சாரங்கள் அவர்களை சொர்கத்திற்கு அனுப்பும் என்பது அறிந்ததே. இந்தியா என்ற கொலையரசே சிங்கள இனவெறியனின் காலடியில அடிவருடிக் கொண்டு வீழ்ந்து கிடக்கும போது இநத வியாபாரிகளையும் பாவம் முருகனையும் விட்டு விடுவோம். எல்லாம போனபின் தமிழனுக்கு முருகன் ஒரு கேடா. யாழ்
ReplyDelete"ஆனால் முருகனை வைத்து பிழைக்கும் கோயில் நிர்வாகத்தை அல்லவா விமர்சிக்கவேண்டும் !"
ReplyDeleteதமிழ் தேசியவாதிகள் முருகன் என்ற கடவுளை பகைத்துக் கொள்ள விரும்பாதிருக்கலாம். (மயில் மீதேறி வந்து வேலாயுதத்தை வீசி விட்டால்? நமக்கேன் வம்பு.) ஆனால் தர்மகர்த்தாக்கள் என்ற மனிதர்களை நோக்கி கண்டனக் குரல்களை எழுப்பியிருக்கலாம்(தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றாக இன்னொருமுறை அல்லது இருமுறை வாசிக்கவும். )
"சும்மா எதுக்கு "பத்வா" என்று இந்த வசனத்தை பாவிக்கிறீகள்"
இது ஒரு வெறும் அரபு வசனம் தான் நண்பரே! அதை யார் உபயோகித்தால் என்ன? இதை பெரிது படுத்த தேவை இல்லை...
Very good article Kalai. Unfortunately, people are not aware to understand or they are not ready to get awarness.
ReplyDelete//கலையகத்தின் அடி முட்டாள் வாதம் முருகன் அருள்பாளித்தார் என்றால் முருகனுக்கு எதிராக கொடி பிடிக்கலாம் ! //
ReplyDeleteவெண்கல சிலை எப்படி அருள்பாலிக்கும்?
//அதை விட்டு இல்லாத முருகனைச் சேர்த்து இழுத்து அசின் விசுவாசத்தை பூசி மெழுகுகின்றீர்கள் !//
ReplyDeleteஇது விசுவாசம் இல்லை, உண்மை.
//அசினுக்காக பிசினாக உழைக்கின்றீர்கள்//
ReplyDeleteநீங்கள் யாருக்கு உழைக்கிறீகள்?
//சும்மா எதுக்கு "பத்வா" என்று இந்த வசனத்தை பாவிக்கிறீகள் (முஸ்லிம்களை வம்புக்கு இலுப்பதில் கலையகமும் விதிவிலக்கு இல்லை போல் தெரிகிறது).//
ReplyDeleteயாரும் வம்புக்கு இழுக்கவில்லையே. நீங்கள் ஏன் பிரச்சனையை உருவாக்க முனைகின்றீர்கள்.
//புலி ஆதரவாளர்களே வெளிநாடுகளில் கொண்டாட்டங்கள் செய்கிறார்களே.//
ReplyDeleteஇலங்கையில் நீங்கள் செய்கிறீர்கள். மற்றவர்கள் செய்யக் கூடாதா? இலங்கையில் தமிழர்கள் ஈடுபடும் கலியாட்டங்கள் உங்களுக்குத் தெரியாதா?
சில பின்னூட்டிகளுக்கு அர்த்தம் விளங்காது ஆர்ப்பரிப்பதில் அலாதிப் பிரியம்.
ReplyDeleteநாத்திகவாதிகள் தவிர்த்து மற்றவர்களுக்கு...
ஏன் உங்களால் முருகன் மீது தடையுத்தரவு போடமுடியாது?
வெண்கலச் சிலை அருள் பாலிக்காது, தர்மகர்த்தாக்கள்தான் செய்தார்கள் என்ற அலப்பறையை விடுத்துவிட்டு ஆத்திக வழியில் யோசித்து இந்தக் கேள்விக்கான விடையளிக்க முயலுங்கள்.
ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க....
ReplyDeleteசேனநாயகா பதவியில் இருந்த போது தமிழ் வியாபாரிகளின் மொத்த பங்களிப்பு இலங்கை வியாபாரத்தில் 90 சதவிகிதம்.
வங்கியில் மட்டும் 400 கோடி.
மொத்தம் பத்து பேர்கள் கையில் தான்
//வெண்கலச் சிலை அருள் பாலிக்காது, தர்மகர்த்தாக்கள்தான் செய்தார்கள் என்ற அலப்பறையை விடுத்துவிட்டு ஆத்திக வழியில் யோசித்து இந்தக் கேள்விக்கான விடையளிக்க முயலுங்கள். //
ReplyDeleteஆத்திக வழியில் நீங்கள் சொல்லலாமே?
ஆத்தீகம் நாஸ்தீகம் என்று புரூடா விடாதீர்கள்
கலையகம் யதார்த்தத்திற்கு அப்பால் சென்றிருக்கின்றது அல்லது யதார்த்தத்தை உணர மறுக்கின்றது
ReplyDeleteஇலங்கையில் சிங்களவர் உட்பட எல்லோரும் ராஜபக்சவுக்கும் குடுபத்திற்கும் முதல் மரியாதை செய்யவேண்டிய கட்டாயம் சர்வதிகார ஆட்சியே !
இதில் சில தமிழ் பச்சோந்திகள் விரும்பியும் சிலர் கட்டாயத்தினாலும் பயத்தினாலும் செய்கின்றார்கள்
ஆனால் அசின் போன்றோருக்கு எந்தக் கட்டாயமும் இல்லை
ஆகவே அசினை விமர்சிப்பவர்கள் ஏன் இதை விமர்சிக்கவில்லை என்று சொல்லி அசினுக்கு பிசினாக உழைக்கின்றது கலையகம்
//ஆனால் அசின் போன்றோருக்கு எந்தக் கட்டாயமும் இல்லை//
ReplyDeleteஅசின் யாழ்ப்பாண நோயாளிகளுக்கு தனது செலவில் சிகிச்சை அளித்தது தவறா? அந்த மக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? தேவையில்லாத கதைகளை விட்டு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.
//இலங்கையில் சிங்களவர் உட்பட எல்லோரும் ராஜபக்சவுக்கும் குடுபத்திற்கும் முதல் மரியாதை செய்யவேண்டிய கட்டாயம் சர்வதிகார ஆட்சியே !//
ReplyDeleteஆடி வேல் நடத்த வேண்டிய கட்டாயம் என்ன
//எல்லோரும் ராஜபக்சவுக்கும் குடுபத்திற்கும் முதல் மரியாதை செய்யவேண்டிய கட்டாயம் சர்வதிகார ஆட்சியே !இதில் சில தமிழ் பச்சோந்திகள் விரும்பியும் சிலர் கட்டாயத்தினாலும் பயத்தினாலும் செய்கின்றார்கள்//
ReplyDeleteமுன்பு வன்னியில் பிரபாகரனுக்கும், தமிழ்செல்வனுக்கும் மக்கள் பயந்த மாதிரி நிலமை என்று சொல்கிறீர்கள்.
//அசினுக்கு பிசினாக உழைக்கின்றது கலையகம் //
அப்படி செய்தால் அது நல்ல விடயமே. பலருக்கு அசின் கண்பார்வை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார். 150 அனாதை பிள்ளைகளை தத்தெடுத்துள்ளார். ஆனால் இந்த தமிழ் பச்சோந்திகள் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்? தமிழர்களுக்கு மற்றவர்கள் செய்யும் உதவிக்கும் தடையாக உள்ளார்கள்.
//இலங்கையில் சிங்களவர் உட்பட எல்லோரும் ராஜபக்சவுக்கும் குடுபத்திற்கும் முதல் மரியாதை செய்யவேண்டிய கட்டாயம் சர்வதிகார ஆட்சியே !//
ReplyDeleteநான் இலங்கையில்தான் இருக்கிறேன் அதற்கான எந்த சிங்களவனுக்கும் முதல் மரியாதை செய்யவில்லை. சக தமிழர்கள் செய்வதுபோல் சிங்கள நிலைவுத் தூபிகளுக்கு முன் படம் பிடித்து அதை facebook இல் போட்டு சிங்கள தேசத்திற்கு வால் பிடிப்பதிலிருந்து சிங்களப் படைகளுடன் பல்லைக் காட்டிக் கொண்டு கதையளப்பது முதல், சிங்கள பைலாக்களை கேட்டு மகிழும் எந்த விடங்களிலும் ஈடுபடுவதில்லை. என்னால் சர்வதிகார ஆட்சியை எதிர்க்க முடியாவிட்டாலும் என் அளவிற்கு முடிந்த வரை எதிர்ப்பாளனாகத்தான் இருக்கிறேன்.
தன்மானமும் போராட்டக் குணமும் உள்ள எந்த தமிழனும் சிங்களவர் உட்பட எல்லோரும் ராஜபக்சவுக்கும் குடுபத்திற்கும் முதல் மரியாதை செய்யமாட்டான். இந்த யதார்த்தம் தெரியாமல் புது வியாக்கியானம் கொடுக்காதீர்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
//அசினை விமர்சிப்பவர்கள் ஏன் இதை விமர்சிக்கவில்லை என்று சொல்லி அசினுக்கு பிசினாக உழைக்கின்றது கலையகம்//
ReplyDeleteநீங்ககள் ஏன் 'சிங்களவர் உட்பட எல்லோரும் ராஜபக்சவுக்கும் குடுபத்திற்கும் முதல் மரியாதை' செய்யவேண்டும் என்று அடம் பிடிக்கின்றீர்கள் என்று விளங்கவில்லை.
அசின் செய்தது சரியென கலையகம் அடம் பிடிக்கவில்லை. தமிழர்கள் செய்யும் அடாவடித்தனத்தைவிட அது ஒன்றும் பெரிய விடயமல்ல என்பதுதான் அர்த்தம். அதுதானே உண்மையும் கூட?
//புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.//
ReplyDeleteஆனால் இறைச்சி கைறியும், சோறும் சாப்பிடும் ஆசையில் வெள்ளை கொடி பிடிக்கும்.
//கலையகத்தின் அடி முட்டாள் வாதம் முருகன் அருள்பாளித்தார் என்றால் முருகனுக்கு எதிராக கொடி பிடிக்கலாம் ! //
ReplyDeleteநாத்திக தமிழர்கள் வெண்கல சிலைக்கு எதற்கு ஆர்பாட்டம் என்றும், ஆத்திக தமிழர்கள் அவன் எது செய்தாலும் நல்லதே என்றும் போராடமல் சும்மா இருந்துவிட்டார்களோ?
//இறைச்சி கைறியும், சோறும் சாப்பிடும் ஆசையில் வெள்ளை கொடி பிடிக்கும்//
ReplyDeleteநான் குறிப்பிட்டது பழமொழி, LTTE பற்றியல்ல. உங்கள் 'அறிவு' எந்தளவு என்பது இப்போது விளங்குகிறது. உங்கள் உள்நேக்கமும் விளங்குகிறது.
//வன்னியில் பிரபாகரனுக்கும், தமிழ்செல்வனுக்கும் மக்கள் பயந்த மாதிரி நிலமை என்று சொல்கிறீர்கள்//
ReplyDeleteநீங்கள் வன்னியில் வாழ்ந்தவரா? தற்போதைய வன்னி மக்களின் நிலை தெரியுமா?