Monday, June 28, 2010

டொரான்டோ நகரில் கலவரம், கனடிய போலிஸின் காடைத்தனம்

டொரண்டோ நகரில் G20 உச்சி மகாநாட்டை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம், போலிஸ் தலையீட்டால் கலவரமாக மாறிய காட்சிகள் கீழே. பூங்கா ஒன்றில் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்கள் மீதும் போலிஸ் தடியடிப் பிரயோகம் செய்வதையும் இங்கே இணைக்கப்பட்ட வீடியோவில் காணலாம்.

கனடாவில், டொராண்டோ நகரில் ஆரம்பமாகியுள்ள G8 & G20(செல்வந்த நாடுகளும், அபிவிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும்) உச்சி மகாநாட்டை எதிர்த்து பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் ஆரப்பாட்டம் செய்தனர். மகாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் போலிஸ் முன்கூட்டியே நூற்றுக்கணக்கானோரை கைது செய்திருந்தது.Pre-empting Dissent: Silencing opposition to G20 summit எந்த வித நீதிமன்ற உத்தரவுமின்றி, டொராண்டோ நகரில் திடீரென பல வீடுகள் சோதனையிடப்பட்டன. முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்வலர்கள் பலர், "அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டில்" கைது செய்யப்பட்டனர். ( House raids, warrants and arrests)இதற்கிடையே அமெரிக்க-கனடிய எல்லை மூடப்பட்டு பல ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். டொராண்டோ நகரில் உச்சி மகாநாடு நடக்கும் இடத்தை சுற்றியுள்ள பிரதேசத்திற்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முள்ளுக்கம்பி வேலியிடப்பட்ட அந்தப் பிரதேசம் திறந்தவெளி சிறைச்சாலை போல காணப்படுகின்றது.


1 comment:

  1. உண்மையாகவே கடந்த இரு நாட்கள் மிகவும் மோசமான வார இறுதி நாட்கள் எண்டு சொல்லலாம்.அழகான டொரோண்டோ டௌன்டவுன் அலங்கோலமாக தென்பட்டது .உண்மையில் அமைதியாக ஆரம்பித்த ஆர்பாட்டம் வன்முறையில் முடிந்தது. 1 .9 பில்லியன் டாலர் பணம் அரசியல் வியாதிகளுக்கு விரயமாக்கபட்டிருகிறது. 3 போலீஸ் கார் எரிக்கபட்டது. சில பில்டிங் உம் சேதமாகியது.அநேகமாக இன்று டௌன்டவுன் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்கிறேன். நேற்றிய தினம் கடும் மழைக்கு மத்தியிலும் அமைதியாக ஆர்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் டொரோண்டோ போலீஸ் நடந்து கொண்ட விதம் உண்மையில் சரியில்லை.

    ReplyDelete