துருக்கியில் "குர்திஸ்தான்" என்ற தனி நாட்டிற்கான ஆயுதப் போராட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது. அந்த இடத்தில் அரசுக்கு எதிரான குர்து மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. துருக்கி நகர வீதிகளில் இறங்கிய குர்து இளைஞர்கள், பாதுகாப்புப் படைகளை தீரத்துடன் எதிர்த்து போராடி வருகின்றனர். அவர்களது ஆயுதங்கள், கவன் கற்கள், பெட்ரோல் குண்டுகள் ஆகியன. அதே நேரம் துருக்கி இராணுவம் டாங்கிகள், தானியங்கி ஆயுதங்கள் சகிதம் கலவரத்தை அடக்க பெரும்பாடு படுகின்றது. குர்திஷ் விடுதலை இயக்கமான PKK யின் 31 வது ஆண்டு நிறைவு தினம், குர்து இன இளைஞர்களின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது. துருக்கியில் குர்து மக்கள் வாழும் நகரங்கள் முழுவதும் கலவரத்தீ பற்றிக் கொண்டது.குர்திஸ்தான் மாநிலத் தலைநகரமான டியார்பாகிர்(குர்து மொழியில் "அமெட்") கலவரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினருடனான மோதலில் ஒரு மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இதற்கிடையே குர்து மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் DTP கட்சியை தடை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதி அமைச்சு தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டில், DTP துருக்கியின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக பிரிவினையை ஆதரிப்பதாக முறையிட்டுள்ளது. கட்சி தடைசெய்யப்படும் பட்சத்தில், அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கும் தடை ஏற்படலாம்.
பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி தோழர்!
ReplyDeleteமேலும், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தற்போது நடைபெறும் புரட்சிகள் ஆர்வமுட்டுவனவாக உள்ளன. முடிந்தால் அவை பற்றி உங்களுக்குத் தெரிந்தனவற்றையும் பகிர்ந்துக்கொள்ளவும்...
தோழமையுடன் இ.அரவிந்த்...
நன்றி, அரவிந்த். உங்களைப் போன்ற தோழர்கள் வினவும் போது தான், குறிப்பிட்ட விஷயத்தில் எத்தனை பேர் ஆர்வமாக இருக்கின்றனர் என்று எனக்கு தெரிய வருகின்றது. நிச்சயமாக லத்தீன் அமெரிக்க நாட்டு பிரச்சினைகள் குறித்தும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.
ReplyDeleteமிக்கநன்றி தோழர்!
ReplyDeleteதோழமையுடன் இ.அரவிந்த்...
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece
ReplyDeleteis this true?
//http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece
ReplyDeleteis this true?//
ajimoosa, இது போன்ற செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. பின்னணியில் யார் இருக்கின்றனர்? அவர்களின் நோக்கம் என்ன? உறுதிப்படுத்துவதற்கு இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள்.
எப்போது இது நிகழ்ந்தது அண்ணா?
ReplyDeleteஉங்கள் பதிவிற்கு நன்றி
//எப்போது இது நிகழ்ந்தது அண்ணா?
ReplyDeleteஉங்கள் பதிவிற்கு நன்றி//
இந்தப் பதிவிட்ட தேதி, வருடத்தை பார்க்கவும். இந்தப் பதிவை எழுதிய அதே நாளில் அல்லது சில தினங்களுக்கு முன்னர் நடந்திருக்கிறது.