Thursday, November 12, 2009

புதுக்குடியிருப்பு - இதுவரை வெளிவராத போர்க்களக் காட்சிகள்

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்திற்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஆயுதங்களை புலிகள் வைத்திருந்ததனர். இலங்கை அரசு, அதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஆயுத தளபாடங்களை கண்டு அதிர்ச்சியுற்றது. புலிகளின் சொந்த தயாரிப்பான 120 மில்லிமீட்டர் "பசிலான்" ஆர்ட்டிலெறி, சீன தயாரிப்பான விமான எதிர்ப்பு பீரங்கி,அதிக சேதம் விளைவிக்க கூடிய தெர்மொபரிக் ஆயுதங்கள், என்பன கண்டெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆயுதங்கள். இவற்றுடன் மோர்ட்டார்கள், ஷெல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நீர்மூழ்கிக் கப்பல் என்பனவும் இலங்கை இராணுவத்தை வியப்பில் ஆழ்த்தின. "சுனாமி மீள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவனங்கள், மேற்படி நவீன ஆயுதங்களை கடத்தி வந்து உதவியிருக்கலாம்." இவ்வாறு கூறுகின்றது இலங்கை அரசு. எது எப்படியிருப்பினும், இறுதிப்போரில் புலிகள் அந்த ஆயுதங்களைப் பாவிக்காததேன்? என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர் யாரும் இல்லை. மே மாதம் போர் ஓய்ந்த பின்னர், அனுமதிக்கப்பட்ட "News X" என்ற இந்திய ஊடக நிறுவனம் இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. News X தொலைக்காட்சி கமெரா, இலங்கை அரச படைகளின் அகோரமான ஷெல் வீச்சுக்கு இலக்காகி சேதமுற்ற புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனையையும் பதிவு செய்ய தவறவில்லை.


Part 1

Part 2

Part 3

3 comments:

  1. தகவலுக்கு மிகவும் நன்றி கலையரசரே!

    ReplyDelete
  2. இத்தனை நவீன ஆயுதங்கள் இருந்தும் புலிகள் ஏன் தோற்றார்கள். அதை பயன் படுத்தாமையால். ஏன் அவர்கள் பயன் படுத்தவில்லை. விடை தெரியாத இந்த ஒரு கேள்விக்குள் ஆயிரம் பதில்கள் உள்ளன. பதில் சொல்லக்கூடிய தகவல் வைத்துள்ள எவரும் இன்று உயிருடன் இல்லை. ஆனால் நம்மால் அனுமானிக்க முடியும். போர் நிறுத்த காலத்துக்கு முந்தைய அவர்களின் போர் வெற்றியே போர் நிறுத்தக்காலத்துக்கு பிந்தைய தோல்விக்கு காரணமாய் அமைந்து விட்டது. சில மாதங்களுக்கு முன் கலையகத்தில் வெளியான பிரிவினை கோரும் துருக்கி நாட்டு போராளிகள் புலிகள் குறித்து சொன்ன கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. சில பின் நகர்வுகள் வெற்றிக்கு வழி வகுத்தன. சில பின் நகர்வுகள் மிகப் பெரிய தோல்விக்கு வழி வகுத்து விட்டன. நவீன ஆயுதங்கள் அதிகம் இல்லாத காலத்தில் கூட பெரிய வெற்றி பெறா விட்டாலும் மோசமான தோல்வியை அடைய வில்லையே. 4வது ஈழப்போரில் எல்லா வசதிகள் இருந்தும் ஏன் தோல்வி ஏற்பட்டது. எம் ஆய்வில் சுலபமாய் கிடைத்த பதில். தங்கள் பலத்தை மட்டும் நம்பியவரை ஜெயிக்க முடிந்தது அல்லது தோல்வியில் இருந்து தப்பிக்கவாவது முடிந்தது. சர்வதேசத்தை என்று நம்பினார்களோ அன்றே சிரமம் துவங்கிவிட்டது. யுத்தத்தை இலங்கை ராணுவம் முடிக்க எத்தனித்தது. புலிகள் எந்த வெற்றியும் பெறாவிட்டாலும் யுத்தத்தை நீட்டிக்க விரும்பினார்கள். அதற்காகவே ஆயுதத்தை பயன்படுத்தாமல் சேமித்தார்கள். என்றேனும் சர்வதேசம் மனம் மாறும் என்று நம்பினார்கள். அது வரை யுத்தத்தை இழுக்க நினைத்தார்கள். இலங்கை அரசுக்கும் சர்வதேசம் மாறி விடுமோ என்ற பயம் இருந்தது. சர்வதேசத்தின் நிலை மாறுவதற்குள்ளாக எல்லாவற்றையும் முடித்து விட முனைந்தார்கள். ராணுவம் தன் இழப்பு குறித்து கவலைப் படாமல் போரிட்டார்கள். சரணடைந்த பெரும் திரளான போராளிகள், கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஆயுதங்கள் இதை தான் சொல்கின்றன. எது எப்படி இருந்தாலும் யுத்தத்தில் யாராவது ஒருவர் தானே ஜெயிக்கமுடியும்.

    ReplyDelete
  3. பகிர்விற்கு நன்றி கலையரசன்,

    விடை தெரியாத கேள்விகளை அதிகமாக்கவே செய்கின்றது. ஆனபோதிலும், நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete