Thursday, November 26, 2009

திருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்

"டியாகோ கார்சியா", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பிரிக்கா, அல்லது இந்தியாவில் இருந்து சென்று குடியேறியவர்கள். ஒரு நாள் திடீரென வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் தீவுவாசிகளை இரவோடிரவாக வெளியேறச் சொன்னார்கள். அனைவரையும் கப்பலில் ஏற்றி மொரிசியசில் இறக்கினார்கள். டியோகோ கார்சியா, தீவு மக்களின் ஒப்புதல் இல்லாமலே அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது. நாடுகடத்தப்பட்ட டியாகொகார்சியா மக்கள் பெயரளவில் பிரிட்டிஷ் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டனர். இருப்பினும் மொரிசியசில் வறுமையில் உழன்று, தற்கொலை செய்து கொண்ட அபலைகளுக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் சோறு போடவில்லை.
இன்று அது அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளங்களில் ஒன்று. அமெரிக்க இராணுவவீரர்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே தீவில் வசிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புக்கு டியாகோ கார்சியா தளம் அளப்பெரிய பங்காற்றியுள்ளது.

1 comment:

  1. உண்மைதான் இந்திய பெருகடல்லில் British Indian Ocean பகுதில் ஒரு சிறு தீவு ஒன்றில் அமெரிக்க ரனுவதம் அமைத்து உள்ளது Diego Garcia [டீகோ கார்சியா] தீவில் இந்தியாவில் இருந்து இருந்து 2000 கிமி தொலைவில் அமெரிக்க ராணுவ தளம் அமைத்து உள்ளது
    http://www.youtube.com/watch?v=uWYCcdiqsBA&feature=player_embedded


    அதுமட்டும் அல்லாமல் இரண்டாவதாக Indonesia ஜகர்தா கடற்பரப்பில் உள்ள Cocos Island தீவில் ராணுவ தளம் அமைப்பு இந்திய பெருகடலில் உளவு விமானத்தின் முலமாக கண்கநிகிறனர் பார்க்கவும் வீடியோ

    இந்திய பெருகடலில் அமெரிக்காவின் அசைhttp://www.youtube.com/watch?v=XsOS8M-GGAM

    ReplyDelete