Sunday, November 29, 2009

11/26 அமெரிக்க இன அழிப்பு நினைவு தினம்

ஐரோப்பாவில் இருந்து சென்ற வெள்ளையின வந்தேறுகுடிகள் பூர்வீக அமெரிக்க மக்களை படுகொலை செய்து நிலங்களை ஆக்கிரமித்தனர். இன அழிப்பின் பின்னர் ஐரோப்பியமயமாக்கப்பட்ட அமெரிக்காவில் "நன்றி கூறும் தினம்" வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதாவது ஐரோப்பிய வந்தேறுகுடிகளை தங்க அனுமதித்ததற்காக பூர்வீக அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்களாம். இனவழிப்பு செய்த கொலையாளிகள் வரலாற்றை திரிபுபடுத்திய அயோக்கியத்தனம் தான் "Thanksgiving day".


1970 லிருந்து நிறுவனமயப்பட்ட பூர்வீக அமெரிக்கர்கள், "நன்றி கூறும்" தினப் பண்டிகை நாளை, தேசிய இனவழிப்பு நினைவு தினமாக அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் இனப்படுகொலை செய்யப்பட்ட தமது முன்னோரை நினைவுகூருகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்ட சுட்டிகளையும், புகைப்படங்களையும், வீடியோவையும் பார்க்கவும்.

United American Indians


40th Native American Day Of Mourning 11-26-09

3 comments:

  1. Mr.Kalaiyarasan,

    I always admire your deep knowledge of various subjects.I sometimes think you are like a mobile library.
    However I am a bit purplexed by the fact that you always talk about oppression of people from all over the world but try to omit or trivialise the freedom struggle and oppression of Eelam Tamils.

    You have tried to create an image that Eelam struggle is just a class and caste struggle ,I accept that Eelam tamils have caste divisions and class divisions ,I feel that we must tackle these divisions at the same time as we struggle for our liberation.
    Just because we have divisions among ourselves doesn't mean that we have to stop fighting the 'Sinhala chauvanism'.
    African people themselves have tribal divisions and deep animosity runs among them due to these tribal divisions .Does that mean they should stop fighiting against White Racism.?

    -vanathy

    ReplyDelete
  2. பாராட்டுகளுக்கு நன்றி, வானதி.
    உலகில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு பின்னால் வர்க்கப் போராட்டம் மறைந்துள்ளது என்பதே எனது தாழ்மையான கருத்து. இதற்கு ஈழப்பிரச்சினை விதிவிலக்காக இருக்க முடியாது. சிங்கள பேரினவாதத்திடம் உரிமை கோரும் தமிழரின் தேசிய இனப்போராட்டம் நியாயமானது என்பது மறுப்பதற்கில்லை. அதே போல தமிழருக்குள், தாழ்த்தப்பட்ட மக்களின் சம உரிமைக்கான போராட்டமும், உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டமும் நியாயமானவை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அடக்கப்படும் ஒரு இனம் தனக்குள் இன்னொரு பிரிவினரை அடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடும் தமழீழ தேசியவாதம்; தலித் விடுதலை, பெண் விடுதலை, வர்க்க விடுதலை ஆகிய முற்போக்கு அம்சங்களையும் சேர்த்துக் கொள்வது முற்றுமுழுதான விடுதலைக்கு வழிவகுக்கும் எனக் கருதுகிறேன்.
    ஆப்பிரிக்க மக்களின் உதாரணம் குறித்த அதிக புரிதல் அவசியம். ஆப்பிரிக்க மக்கள் வெள்ளையின நிறவெறிக்கு எதிராக போராடுவதை நிறுத்தி பல தசாப்தங்களாகி விட்டன. அவர்கள் தற்போது இனங்களாக பிரிந்து மோதிக் கொள்கின்றனர். மொழியியல், கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க இனங்கள், அவற்றை பகை முரண்பாடுகளாக காட்டிக் கொள்கின்றனர். ஆப்பிரிக்க இனங்களும், தமக்குள் இருக்கும் சாதிய, வர்க்க வேறுபாடுகளை புறக்கணித்து வருகின்றன.

    ReplyDelete
  3. //However I am a bit purplexed by the fact that you always talk about oppression of people from all over the world but try to omit or trivialise the freedom struggle and oppression of Eelam Tamils.
    //

    எனக்கும் என் நண்பர்களுக்கும் இது போல தோன்றிய்துண்டு... விளக்கத்திற்கு நன்றி

    ReplyDelete