Saturday, October 10, 2009

குர்கான்: செல்வந்த இந்தியர்களின் சுய தடுப்பு முகாம் - ஆவணப்படம்

உலகமயமாக்கலின் பின்னர் இந்தியா வெகுவாக மாறிவிட்டது. லட்சங்களில் சம்பளம் வாங்கும் மத்தியதரவர்க்கமும் பெருகி விட்டது. கைநிறையப் பணம் இருப்பதால் பூலோக சொர்க்க வாழ்க்கை வாழஆசைப்படுகிறார்கள். வசதியான வாழ்க்கை தேடி அவர்கள் அமெரிக்காவிற்கு செல்லத்தேவையில்லை. இந்தியாவிலேயே, புது டில்லி மாநகரத்திற்கு அருகிலேயே, அவர்களுக்கு என்று குட்டி சிங்கப்பூர் உருவாகியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் தரிசு நிலமாக இருந்த ஹரியானா மாநிலத்திற்கு சொந்தமான நிலத்தில் குர்கான் என்ற நவீன நகரம் முளைத்துள்ளது. பாதுகாப்பு வலயத்தினுள்ளே, அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நவீனகுடியிருப்புகளை சுற்றி பாதுகாப்பு வேலி இடப்பட்டுள்ளதால், திருட்டுப்பயம் இன்றி நிம்மதியாக வாழலாம். பாடசாலைக்கு சென்ற பிள்ளையையாராவது கடத்திச் சென்றுவிடுவார்களோ என்று அஞ்சத் தேவையில்லை. குர்கான் குடியிருப்புகளின் உள்ளேயே பாடசாலைகள் அமைந்துள்ளன. அந்தநகரத்தில் குடியிருப்பவர்கள் வேலைக்காகவும் வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் யாவும் குர்கானில் அலுவலகங்களை திறந்துள்ளன.

வெளி உலகத்தில் இருந்து துண்டித்துக் கொண்டு, தங்களை தாங்களே சிறைப்படுத்திக் கொண்டு வாழும் பணக்கார வர்க்கம். குர்கானில் இருந்து சிறிதுதூரத்திலேயே சேரி அமைந்திருக்கிறது. அங்கே வாழும் ஏழை மக்கள், பெரும்பாலும் குர்கான் கட்டிடங்களை கட்டிய தொழிலாளர் வர்க்கம். இந்த இருவேறு உலகங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு பிரித்து வைக்கமுடியும்? மேலும் குர்கான் வாசிகள் நிறைவான வாழ்வை அனுபவிக்கிறார்களா? லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக குமுறுகின்றனர்.

குர்கான் நகரைப் பற்றிய இந்த ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில்ஒளிபரப்பானது. (வீடியோ ஆங்கில மொழி உரையாடல்களும், உப-தலைப்புகளும் கொண்டுள்ளது.)

I am Gurgaon. The new Urban India

No comments:

Post a Comment