Tuesday, April 21, 2009

"இறுதித் தீர்மானம்" - குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்

கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட "Final solution", மனித உயிர்களின் பலிபீடத்தில் இந்திய அரசியலை கட்டமைத்து, அதிகார பீடத்தை குறிவைத்து நகர்ந்திட முயற்சிக்கும் இந்துத்துவ சக்திகளின் முகத்தையும், வேர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இந்த ஆவணப்படம். 2002 குஜராத் வன்முறைகளையும், அதன் பின்னணியில் உருவேற்றிய 'வெறுப்பின் அரசியலால்' விளைந்த வெற்றியையும் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்தில் ஆராய்கிறது. ஆனந்த் பட்வர்த்தனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராகேஷ் சர்மா இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். பா.ஜ.க மத்தியில் ஆட்சி புரிந்து வந்த சமயத்தில் வெளிவந்த இந்தப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுக்கவில்லை. மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தடை விதிக்கப்பட்டது.


Final Solution - Massacres in India

3 comments:

  1. நன்றி கலையரசன் நெஞ்சை உருக்கும் விதமாக உள்ளது. எந்த ஒரு நாடு சிறுபான்மையை அரவனைத்து செல்கிறதோ...? அந்த நாடுதான் வளர்சியின் உச்சத்திற்க்கு சென்றுள்ளது என்பதை இந்த்துவா சக்திகள் புரிந்து நடக்க வேண்டும். அது தான் நம் அனைவருக்கும் நல்லது

    ReplyDelete
  2. குஜராத்தில் முஸ்லிம்களைத் தேடித்தேடி நாய்களை வேட்டையாடுவது போல வேட்டையாடி தங்கள் மத குரூரத்தை இந்துத்துவவாதிகள் காட்டியும், இன்னும் இந்த அவலம் சரியாக ஊடகங்களால் உலகிற்கு சொல்லப்படவில்லை. ஊடகங்கள் மறைத்ததை பகிரங்கப்படுத்தி வரும் கலைக்கு என் பாராட்டுக்கள். இந்துத்துவம் சில சமயம் தேசாபிமானி வேடம் தரித்து ஏமாற்றப்பார்க்கும், சில சமயம் இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லி முஸ்லிம்களை எதிரியாக்கும். அதன் மூலம் பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும். இந்துத்துவம் ஒரு பாஸிச வெறி. அதை இந்துக்களின் மனதில் விதைத்து நாட்டை மத ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரிக்க நினைக்கிறார்கள்.

    ReplyDelete
  3. bigman & anony,
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஆமாம், குஜராத் சம்பவம் மொத்த இந்தியாவினதும் வெட்கம் என்பதை பலர் உணர்வதில்லை. ஹிட்லர் காலத்தில் யூதர்களை இனப்படுகொலை செய்த பாவத்திற்காக, இன்றைய ஜெர்மன் அரசும் மக்களும் வருந்துகிறார்கள். யூத இனப்படுகொலையை எதிர்க்காதவர்களை குற்றவாளிகளாகப் பார்க்கின்றனர். அந்த நிலைமை இந்தியாவிலும் ஏற்படவேண்டும்.

    ReplyDelete