tag:blogger.com,1999:blog-37061961.post4960390068720987164..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-37061961.post-67745467966198708252011-09-18T03:17:45.344+02:002011-09-18T03:17:45.344+02:00>ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது,...>ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது, எப்படி போராட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். தயவுசெய்து, ஈழத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பலியாடுகளாக ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம்

100 % உடன்படுகிறேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-51921498218029149082009-07-10T20:45:55.912+02:002009-07-10T20:45:55.912+02:00தோழர் அஸ்கர்,
பொறுமையாக தெளிவாக பதிலளித்தமைக்கு நன...தோழர் அஸ்கர்,
பொறுமையாக தெளிவாக பதிலளித்தமைக்கு நன்றி. தங்களது நிலைப்பாடு தான் எனதும். எமக்கிடையே சில முரண்பாடுகள் எழுந்திருக்கலாம். நான் ஈழத்தில் இருக்கும் தமிழ் உறவுகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருவதால், அவர்களது நாடித்துடிப்பை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். ஈழப்பிரச்சினைக்கு குறுந்தேசியவாதம் தீர்வாகாது என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறோம்.
//ஈழத்தில் இருப்பவர்களிடமிருந்தே ஒரு மார்க்சிய லெனினிய அமைப்பு தோன்ற வேண்டும். அதற்கு தாங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். நீங்கள் ஒரு ஈழத்தமிழன் என்பதினாலேயே இந்த கோரிக்கையை வைக்கின்றேன்.//
இதையே தான் நானும் எதிர்பார்க்கிறேன். உங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். குறிப்பாக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பல (இதில் ஈழத்தமிழர்கள் இனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்கள்) பின்னுக்கு தள்ளப்படடிருந்தன. இதுவரை காலமும் போர்ச் சூழ்நிலை இவற்றைப் பற்றி பேசுவதை பின்போட்டது. இன்று அவை பரவலாக பேசப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இன்றைய இலங்கையின் நிலைமை எப்படி இருக்கிறதென்றால், (தமிழ்) தேசியவாதம் பற்றி பேசுவது உயிருக்கு ஆபத்தாகலாம். ஆனால், மக்கள் தங்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அது குறித்த விழிப்புணர்வு மட்டும் இன்னும் ஏற்படவில்லை.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-53353549017210390642009-07-10T15:31:44.888+02:002009-07-10T15:31:44.888+02:00நண்பரே,
முஸ்லிம்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு இஸ...நண்பரே,
முஸ்லிம்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு இஸ்லாமிய தீவிரவாதம் சரியென்று நான் கூறவில்லை. அது மேலதிகமான அடக்குமுறைக்கே வழிவகுக்கும் என்றே நினைக்கின்றேன். நான் இங்கு மகஇக என்ற அமைப்பின் ஆதரவாளன்.
ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது, எப்படி போராட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். தயவுசெய்து, ஈழத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பலியாடுகளாக ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம், உங்களின் இந்த கருத்தைத்தான் நாங்களும் இங்கே வலியுறுத்துகின்றோம். தமிழகத்தில் இருக்கும் இந்த பிழைப்புவாதிகள் ஈழப்பிரச்சினையை தங்களின் சுய இலாபத்திற்காகவே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் இதிலும் இப்போது இவர்களுக்கு தோல்விதான். இம்முறை தமிழக மக்களை இவர்களால் ஈழ ஆதரவாளர்களாக அணி திரட்ட முடியவில்லை. தமிழக மக்கள் இம்முறை வெறும் பார்வையாளனாகவே இருந்தனர். சிலர் போரை நியாயப்படுத்தினர். ஏனென்றால் தமிழகம் எப்போதோ நுகர்வு கலாச்சாரத்தில் சீரழிந்துவிட்டது.
ஈழத்தில் இருப்பவர்களிடமிருந்தே ஒரு மார்க்சிய லெனினிய அமைப்பு தோன்ற வேண்டும். அதற்கு தாங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். நீங்கள் ஒரு ஈழத்தமிழன் என்பதினாலேயே இந்த கோரிக்கையை வைக்கின்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-92220553061896202822009-07-09T16:21:49.728+02:002009-07-09T16:21:49.728+02:00உங்கள் கருத்துக்கு நன்றி அஸ்கர்.
இன்று நொந்து போய...உங்கள் கருத்துக்கு நன்றி அஸ்கர்.
இன்று நொந்து போயிருக்கும் ஈழத்தமிழர்களிடம் தமிழ் தேசியவாதம் பற்றி பேச்செடுத்தாலே காத தூரம் ஓடுகிறார்கள். அவ்வளவு தூரம் அனுபவித்து விட்டார்கள். தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக்கொடுக்காத தமிழ் தேசியவாதம் அவமானகரமான தோல்வி அடைந்துள்ளதை ஈழத்தில் அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர். தமிழ் தேசியவாதத்தின் குறைபாடுகளில் இருந்து படிப்பினை பெற்று, மாற்று என்ன என்று யோசிப்பதே சிறந்த வழியாகும். சிங்கள அரச அதிகாரிகள் இனவாதம் பேசுகிறார்கள் என்பதற்காக, தமிழ் அரசியல் தலைவர்களும் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதம் பேசுவது சரியானதா? இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினம், அரசால் ஒடுக்கப்படுவது உண்மை. ஆனால் அதற்கு இஸ்லாமிய தீவிரவாதமே ஒரே தீர்வு என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா? தமிழகத்தில் இருப்பவர்கள் இதுவரை காலமும் தமிழ் தேசியவாதத்தை வளர்த்து விட்டதால் கண்ட பலன் என்ன?
ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் எதற்காக, எப்போது, எப்படி போராட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். தயவுசெய்து, ஈழத்திற்கு வெளியில் இருப்பவர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பலியாடுகளாக ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-17194728642120905362009-07-09T15:07:09.478+02:002009-07-09T15:07:09.478+02:00நான் தமிழகத்தில் உள்ளவன்,
உங்கள் கட்டுரைகள் நிறைய ...நான் தமிழகத்தில் உள்ளவன்,
உங்கள் கட்டுரைகள் நிறைய வாசித்திருக்கிறேன். உங்களுடைய ஆராய்ச்சி மற்றும் அறிவார்ந்த கட்டுரைகள் ஆகியவற்றை குறைத்து மதிப்பிடுவதிற்கில்லை. ஆனால் இவை மட்டுமே ஒடுக்கப்படும் அந்த ஈழத் தமிழருக்கு தீர்வாகாது. நீங்கள் ஒருபுறம் கட்டுரைகளாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள், மறுபுறம் தோழர் இரயாகரன் இணையத்திலே புரட்சி செய்து கொண்டிருக்கின்றார். இத்ன் மூலம் என்ன சாதிக்கிறீர்கள் என்று தான் புரியவில்லை. நீங்கள் சொல்வது எல்லாம் சரியானது தான், ஆனால் செயல் தந்திரம் வேண்டுமே. மக்களை அணி திரட்டியிருக்கின்றீர்களா?
ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலைக்கு ஈழத் தமிழர் வந்து விட்டதாக கூறுகிறீர்கள். இப்போதைக்கு இருக்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் போராட்ட பாதைக்கே தள்ளப்படுவர். ஏனென்றால் சிங்களவனின் அடக்குமுறை அப்படிபட்டது. சமீப காலமாக சிங்கள நீதிபதி மற்றும் அதிகாரிகளின் கருத்துகளை பார்த்தாலே புரியும்.
இணையத்திலே களமாடும் உங்களைப் போன்றோர்களை விட, போர்க்களத்திலே களமாடி உயிர் நீத்த அந்த புலிகள் எவ்வளவோ மேல் என்றே நினைக்கின்றேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56152669786122915882009-06-08T13:48:13.532+02:002009-06-08T13:48:13.532+02:00பனையூரான், Sen, மதிபாலா, Sivanesan, Indirajith... ...பனையூரான், Sen, மதிபாலா, Sivanesan, Indirajith... மற்றும் அனாமதேயமாக பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-53654816916944217202009-06-08T12:09:33.358+02:002009-06-08T12:09:33.358+02:00உங்கள் கட்டுரைகள் எல்லா வற்றியும் வாசித்து வருகிற...உங்கள் கட்டுரைகள் எல்லா வற்றியும் வாசித்து வருகிறேன் , உங்கள் ஆழ்ந்த அறிவு எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது .

இன வாதம் சரியானது அல்ல அது எந்த இனத்துக்கு எதிராகஇருந்தாலும் அதை எம் சிந்தனையில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும் .

and எமக்காகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் பல அர்ப்பணிப்புகள் தியாகங்களுடன் ஓர் உன்னதமான இலட்சியத்திற்காக போரடிகொண்டிருக்கிறார்கள்.Indrajithnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-79978941817823819482009-06-07T22:27:06.458+02:002009-06-07T22:27:06.458+02:00TNA extends olive branch to TULF, PLOTE, EPRLF
In...TNA extends olive branch to TULF, PLOTE, EPRLF

In a strange turn of events, the Tamil National Alliance (TNA), which was earlier firmly behind the LTTE, has now made overtures to the moderate Tamil parties like the TULF, the PLOTE and the EPRLF (Padmanabha wing) in the run-up to the Municipal elections in Jaffna and Vavuniya.

TNA Parliamentarian N. Srikantha told The Nation yesterday, that they have already held informal discussions with the Democratic Tamil National Alliance (DTNA), comprising the TULF, PLOTE and the EPRLF, to arrive at a common position, on a viable and just political solution to the ethnic problem.
Asked whether the exact aim was to form an electoral pact for the forthcoming local election, Srikantha claimed they had not thought of it.

The TNA Jaffna District Parliamentarian, said they would go for formal talks with the DTNA after their leader R. Sampandan, and two other Parliamentarians who are now in Chennai, return in the next few days.
The DTNA members in general, however, are hostile to having any dealing with the TNA, with TULF Leader V. Anandasangaree, who is the secretary of DTNA vowing “not to touch them with a bamboo pole. I don’t want to have anything to do with them.”

Anandasangaree contacted in this regard, said he would rather quit politics than have anything to do with, “the worst traitors to the Tamil community.”

He said despite all his pleadings, the TNA was the only party that did not call on the LTTE to release the Tamil civilians it was holding as human shields. “Because of them we have to now watch 10-year-old Tamil boys being fingerprinted like common criminals. Those children are scarred for life,” he said.

When pressed from PLOTE Leader Dharmalingam Sithadthan whether it is not better to forget the past for the sake of the people, he said they could not ignore the past. “What we have to see is whether we can redeem the past or not. In any case there is no need to rush.”Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-37134893131533152272009-06-07T19:13:04.642+02:002009-06-07T19:13:04.642+02:00அருமையான பதிவு.
//தாயகத்தின் யதார்த்தத்தில் இருந்...அருமையான பதிவு.

//தாயகத்தின் யதார்த்தத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட புலம்பெர்ந்த தமிழர்கள், மேலைத்தேய நகரத் தெருக்களில் தமிழீழம் வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் யாரும் ஈழம் சென்று போராடப் போவதில்லை.//

முழு உண்மை.
இந்த புலம்பெர்ந்த தமிழர்களினால் 5ம்கட்ட ஈழபோர் தொடங்க போவதாக தமிழ்நாட்டு பதிவர்கள் பலர் கனவு காண்கின்றனர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-11706378456620272452009-06-07T17:14:18.149+02:002009-06-07T17:14:18.149+02:00Dear Sivanesan,
இந்தக் கட்டுரையை தவறான கண்ணோட்டத்...Dear Sivanesan,

இந்தக் கட்டுரையை தவறான கண்ணோட்டத்தில் வாசித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட படி, இலங்கை அரசானது தமிழ் தேசிய சக்திகளை தமிழ் இனவெறியர்களாக காட்டுவதன் மூலம் தடை செய்ய விரும்புகின்றது. இவ்வாறு தான் பாசிசம் தன்னை நிலைப் படுத்திக் கொள்கின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் நியாயமானது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரம் அனைத்து சிங்கள மக்களுக்கெதிரான தமிழ் இனவாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் தேசிய அரசியலை தமிழ் இனவாதத்தில் இருந்து பிரித்தெடுக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நாம் செய்யும் ஒவ்வொரு தவறையும் எதிரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். தமிழ் தேசியவாதிகள் எங்காவது இனவெறிச் செயல் புரிந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும். மாறாக அதனை நியாயப்படுத்துவது தவறானது. அப்படிச் செய்வது எதிரிக்கே சாதகமானது.

இது இலங்கையில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. இந்திய அரசு, இஸ்லாமிய மத அரசியல் சக்திகளை, "மத அடிப்படைவாதிகள்", "மதவெறியர்கள்" என்று முத்திரை குத்தி ஒடுக்கப் பார்க்கின்றது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதையே செய்து வருகின்றன. அதற்கு மாறாக பல ஜிகாதி இயக்கங்கள் தாம் மதவெறியர்கள் அல்ல என்றும்,தாம் முஸ்லீம் மக்களின் விடுதலைக்காக போராடுவதாக சொல்கின்றன.

ஹெல உறுமய, ஜே.வி.பி. போன்றன சிங்கள இனவெறி அரசியல் நடத்தி வருகின்றன என்று தான் நானும் சொல்கிறேன். அதே நேரம் சிங்கள இடதுசாரிகளைத் தவிர, பெரும்பான்மை சிங்கள மக்கள் அப்படிப் பார்ப்பதில்லை என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நீங்கள் காட்டிய உதாரணத்தைப் போல, TNA உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து 40000 சவப்பெட்டிகளை (இராணுவ வீரர்கள்) அனுப்புவோம் என்ற கூற்று, தென்னிலங்கையில் இனவெறிப் பேச்சாக கருதப்படுகின்றது.

சிங்களக் கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புகள் அப்பாவி சிங்கள மக்களை குறி வைத்து கொன்றுள்ளன. இப்படியான சம்பவங்கள் நடக்கும் ஒவ்வொரு தடவையும், தென்னிலங்கை ஊடகங்கள் இதை தமிழரின் இனவெறித் தாக்குதலாக காட்டுகின்றன. இதையெல்லாம் நீங்கள் இனவாதம் இல்லை என்று மறுக்கலாம். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதை இனவெறியாக தான் புரிந்து கொள்கின்றனர்.

தமிழர்களும், சிங்களவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மாட்டோம். ஒருவரின் வேதனையை மற்றவர் பகிர்ந்து கொள்ள மாடோம் என்று அடம்பிடித்தால் இனப்பிரச்சினை ஒரு போதும் தீரப் போவதில்லை. முதலில் நீங்கள் ஒரு மனிதர், அதற்குப் பிறகு தான் தமிழர். அப்பாவித் தமிழரின் கொலைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதை சாதாரண சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதே போன்று தமிழர்களும் அப்பாவி சிங்களவரின் கொலைகளை கண்டிக்க முன்வர வேண்டும்.

ஹெல உறுமைய போன்ற கட்சிகள் அல்லது எந்த சிங்களவராவது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை சரி என்று வாதிட்டால் அது இனவெறி தான். அதே போல TNA அல்லது எந்த தமிழராவது அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்படுவதை சரி என்று வாதிட்டால் அதுவும் இனவெறி தான்.

சிங்கள, தமிழ் பொது மக்கள் தம் மத்தியில் இருக்கும் இனவெறியர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும். இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தால், அது கோத்தபாயா போன்ற பாசிஸ்டுகளை வலுப்படுத்தவே உதவும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-20829588364433082292009-06-06T22:13:29.912+02:002009-06-06T22:13:29.912+02:00TNA should be banished from the parliament -Gota
...TNA should be banished from the parliament -Gota

(Lanka-e-News, 30.May.2009, 6.00PM) Defense Secretary Gotabhaya Rajapakse says that Tamil National Alliance (TNA) must be banished from the parliament.

In an interview with a weekend newspaper, he said that everybody knew the TNA was elected to the parliament by LTTE’s rigging. He charged that the organization spoke against the constitution in the parliament as well as abroad. He emphasizes the TNA that spoke to divide the country must be expelled from the parliament at least at the next parliament.

He said that the Tamils could come to politics through political parties like Sri Lanka Freedom Party and United National Party but not through the racist parties.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-62413717111017505012009-06-06T11:38:41.752+02:002009-06-06T11:38:41.752+02:00கருத்துரைத்தமைக்கு நன்றி மதிபாலா.
//தமிழ் தேசியக்...கருத்துரைத்தமைக்கு நன்றி மதிபாலா.

//தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவெறீக் கட்சியென்றால் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜேவிபி?????//

நிச்சயமாக அவையும் இனவெறிக் கட்சிகள் தாம். சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் இன்று இனவாதம் மேலோங்கி காணப்படுகின்றது. எங்காவது ஒரு தமிழர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இனவெறிக் கட்சி என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதே போலத் தான் சிங்களவர்கள் ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற கட்சிகளை இனவெறிக் கட்சிகள் என்று சொல்வதில்லை. இது பெரும்பான்மை மக்களின் கருத்து. இனப்பிரச்சினை இலங்கையின் இரண்டு இனங்களை எந்தளவுக்கு பிரித்து வைத்திருக்கின்றன என்பதற்கு இது சாட்சி. மேலும் நான் இங்கே பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயாவின் கூற்றை சுட்டிக்காட்டி, சிங்களவர்களும் அரசும் எப்படி சிந்திக்கின்றன என எடுத்துக் காட்டியிருக்கிறேன். இது தமிழருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் மற்றப் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளக் கூடாதா?

//ஆனால் இந்தக் கட்டுரை மிக மேலோட்டமான தகவல்களை வைத்து வடிவமைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். //

தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரை இப்படித் தான் ஒரு தகவல் சொல்லப்பட வேண்டும் என்று சுயதணிக்கை வைத்துக் கொள்கின்றனர். வலைப்பதிவுலக நண்பர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். இலங்கையில் நடப்பனவற்றை உள்ளதை உள்ளபடியே சொல்பவர்கள் அருகிவிட்டனர். இப்படியான பின்னணியில் இங்கே கூறப்பட்ட பல தகவல்கள் மேலோட்டமானவையாக தோன்றலாம். உண்மையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரின் நேரடி வாக்குமூலங்களை, அவர்களது உள்ளக்குமுறல்களை, இங்கே கட்டுரையாக வடித்துள்ளேன். இல்லாத ஒன்றை புனைந்து, ஒன்றைப் பத்தாக மிகைப்படுத்தும் "ஊடக தர்மம்" எனக்குத் தெரியாது. அப்படியான செய்திகளைத் தான் தமிழர்கள் அறிய விரும்புகிறார்கள் என்றால், அது அவர்கள் விருப்பம். ஆனால் இந்தப் போக்கு பிரச்சினையை அதிகரிக்க மட்டுமே உதவும்.

//புலிகளைத் த.தே.கூ பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று இலங்கை அரசு எதிர்ப்பார்த்ததா? எதன் அடிப்படையில்?//

இலங்கை அரசு கூட்டமைப்பின் மத்தியஸ்தத்தை எதிர்பார்த்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் தடவையல்ல. புலிகளுடன் நேரடியாக பேச விரும்பாத அரசு, தமிழ் கட்சிகளின் மத்தியஸ்தத்தின் ஊடாக பேசியுள்ளது. நோர்வேயின் மத்தியஸ்தம் எல்லாம் பிற்காலத்தில், பிரச்சினை சர்வதேசமயப்பட்ட பின்னர் ஏற்பட்டவை.

//சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் எம்.பிக்கள் இலங்கைக்கு போனாலே கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற சூழலில் என்னதான் அவர்கள் செய்ய முடியும்?//

இலங்கையிலேயே தொடர்ந்து இருந்து வரும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பற்றிய செய்தி வெளி வருவதில்லை. நான் இங்கே குறிப்பிட விஷயம் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் தொகுதி மக்களின் குறைகள் சம்பந்தமானது. வட-கிழக்கு மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தேர்தலுக்குப் பின்னர் தனது தொகுதி மக்களை சந்தித்ததாக நான் அறியவில்லை. அவர்கள் சார்ந்த தொகுதியின் குறைகளை பாராளுமன்றத்தில் விவாதித்ததாக எங்குமே பதியப்படவில்லை. ஈழத் தமிழ் மக்கள் (ஈழத்தில் வாழும் மக்கள்) பகிரங்கமாக முன்வைக்கும் குற்றச்சாட்டு இது. இந்த உண்மையை சொல்லாமல் மறைப்பது நான் அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

//குரல் கொடுத்ததற்காகவே அரசால் கொல்லப்பட்ட த.தே.கூ பாராளுமன்ற எம்.பிக்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் நண்பரே?//

இலங்கையின் நிலைமை முன்னர் எப்போதும் இல்லாதவாறு தீவிரமடைந்து வருகின்றது. புலிகள் இயக்கம் தமக்கு எதிராக பேசுவோரை, அது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், "இனத் துரோகி" பட்டம் சூட்டி சுட்டுக் கொன்றார்கள். அந்தச் செயலை இன்று வரை நியாயப்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் அதே பாணியை பின்பற்றி வருகின்றது. அரசுக்கு எதிராக பேசுவோரை, அது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், "தேசத் துரோகி" பட்டம் சூட்டி விட்டு சுட்டுக் கொல்கின்றனர். இந்த இடத்தில் (ஈழத்தில் வாழும்) தமிழ் மக்கள் அடிக்கடி தமக்குள்ள சொல்லிக்கொள்ளும் புத்திமதியை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். "நாம் சாப்பிடுவதற்கும், சுவாசிப்பதற்கும் மட்டுமே வாயைத் திறக்க வேண்டும்." கடந்த முப்பது வருடங்களாக தமிழ் மக்கள் அப்படியான வாழ்க்கைக்கு பழகி விட்டார்கள். இந்த யதார்த்தம் இலங்கைக்கு வெளியில் எத்தனை பேருக்கு தெரியும்?Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-30785875999636205532009-06-06T06:04:07.511+02:002009-06-06T06:04:07.511+02:00தமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை ...தமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்." - பாதுகாப்பு செயலதிபர் கோத்தபாய ராஜபக்ஷ

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவெறீக் கட்சியென்றால் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜேவிபி?????

பொதுவாக நண்பரே உங்கள் பல பதிவுகளைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன்.

ஆனால் இந்தக் கட்டுரை மிக மேலோட்டமான தகவல்களை வைத்து வடிவமைக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.

///சமாதான பேச்சுவார்த்தையில் கூட்டாளியான இலங்கை அரசும், த.தே. கூ. பாராளுமன்றத்தில் புலிகளை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என எதிர்பார்த்தது.//

புலிகளைத் த.தே.கூ பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று இலங்கை அரசு எதிர்ப்பார்த்ததா? எதன் அடிப்படையில்?

//ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த போது, ஏகாதிபத்தியத்திடம் தமிழீழத்தை யாசித்துக் கொண்டிருந்தார்கள்.//

சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் எம்.பிக்கள் இலங்கைக்கு போனாலே கொல்லப்பட்டு விடுவார்கள் என்ற சூழலில் என்னதான் அவர்கள் செய்ய முடியும்? குரல் கொடுத்ததற்காகவே அரசால் கொல்லப்பட்ட த.தே.கூ பாராளுமன்ற எம்.பிக்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் நண்பரே?மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-92215647601167321252009-06-05T09:23:14.056+02:002009-06-05T09:23:14.056+02:00உங்களைப் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
வெறுமனே ப...உங்களைப் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
வெறுமனே புலம் பெயர் தமிழர்களையும் மற்றவர்களையும் விமர்சனம் செய்வதை விட்டு தற்போதைய சூழ்நிலையில் ஈழத்தில் உள்ள தமிழர்களின் அவலத்தை குறைத்து அவர்கள் கொல்லப்படுவதை தடுக்க என்ன செய்யலாம் என்று கருத்துக்களையும் செயல் திட்டங்களையும் எங்கள் போன்ற சாமானியத் தமிழர்களுக்கு கூற முடியுமா?
உங்களைப் போன்றவர்கள் புலம் பெயர் மற்றும் ஈழத்தமிழர்களை ஏதோ மூளை இல்லாத மதி கேட்டவர்கள் மாதிரி நக்கல் அடித்து விமர்சனம் செய்து வருவதை இப்போது கூடுதலாக அவதானித்து வருகிறேன்.
இந்தத் தமிழர்கள் உங்களைப் பொறுத்தவரையில் முட்டாள்களாக இருக்கலாம்,ஆனால் அவர்கள் உண்மையானவர்கள், மனிதாபிமானம் உள்ளவர்கள் , அங்கு இருப்பாவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள்.
நீங்களும் மற்றைய தோழர்களும் உங்கள் உப்பரிகைகளில் இருந்து இறங்கி வந்து எங்கள் போன்ற மக்குகளுக்கு வழி காட்டினால் நன்றாக இருக்கும்.sennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-46091480791504128542009-06-05T08:33:12.899+02:002009-06-05T08:33:12.899+02:00புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகள் என்பதை உலக...புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகள் என்பதை உலகுக்கு பறை சாற்றவே ஈழத்தமிழர்கள். த.தே.கூ விற்கு வாக்களித்தனர். மேலும் குரல் கொடுத்ததால் பறிக்கப்பட்ட த.தே.கூ உறுப்பினர்களை உமக்கு தெரியாதா??பனையூரான்https://www.blogger.com/profile/09469846313513236418noreply@blogger.com