tag:blogger.com,1999:blog-37061961.post5542837989724712420..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-37061961.post-79595895567559175192010-11-12T12:37:20.977+01:002010-11-12T12:37:20.977+01:00//நல்ல நகைச்சுவையான கருத்து. இன்று பௌதீகவியலில் அத...//நல்ல நகைச்சுவையான கருத்து. இன்று பௌதீகவியலில் அதிகம் ஆய்வுக் கட்டரைகள் எழுதப்படுவது இஸ்ரேலிலேயே ஆகும்.

அத்துடன் அனைத்து துறைகளிலும் சாதனை படைப்பது பெரும்பாலும் இஸ்ரேல் நாட்டிலிருந்துதான்.

செய்திப்பத்திரிகைகள் படிக்கும் பழக்கமில்லை என நினைக்கிறேன்.//

நண்பரே, நீங்கள் தான் எதையும் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ உளறுகின்றீர்கள். நான் இங்கே குறிப்பிட்டது இரண்டாயிரம் வருடங்களாக அரபு நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களைப் பற்றியது. அடுத்த தடவை பின்னூட்டமிட முன்னர் ஆறுதலாக வாசித்து விட்டு கருத்திடவும். நன்றி.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-49902323648070656662010-11-12T12:08:38.033+01:002010-11-12T12:08:38.033+01:00//மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த யூதர்களைப் பற்ற...//மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த யூதர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.//

நல்ல நகைச்சுவையான கருத்து. இன்று பௌதீகவியலில் அதிகம் ஆய்வுக் கட்டரைகள் எழுதப்படுவது இஸ்ரேலிலேயே ஆகும்.

அத்துடன் அனைத்து துறைகளிலும் சாதனை படைப்பது பெரும்பாலும் இஸ்ரேல் நாட்டிலிருந்துதான்.

செய்திப்பத்திரிகைகள் படிக்கும் பழக்கமில்லை என நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-81182801509547409442010-10-22T15:59:11.558+02:002010-10-22T15:59:11.558+02:00M.S.E.R.K நன்றி,சமஸ்கிருதத்தில் ஓம் என்ற எழுத்து. ...M.S.E.R.K நன்றி,சமஸ்கிருதத்தில் ஓம் என்ற எழுத்து. அந்தப் படம் தற்செயலாக இணையத்தில் தேடிய பொழுது கிடைத்தது. இந்தியாவின் இந்து மத அடிப்படைவாதிகள் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு வைத்துள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவான தமிழர்களும் அவர்களின் கருத்துகளை பிரதிபலிக்கின்றனர். அதைத் தவிர வேறு ஒற்றுமை எதுவும் இல்லை.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-34256973651807514442010-10-22T14:09:03.795+02:002010-10-22T14:09:03.795+02:00நண்பர் கலை,
விவாததுக்குரிய நல்லப் பதிவு! ஆனால் இ...நண்பர் கலை,
விவாததுக்குரிய நல்லப் பதிவு! ஆனால் இந்தப் பதிவிற்கு, மேலுள்ள படம் பொருத்தமானதுத்தானா? யூதர்களுக்கு வேண்டுமானால் அந்த நட்சத்திரக்குறி சம்மந்தப்படலாம்.அனைத்து தாய்நாட்டு அல்லது அனைத்து புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அந்த சம்ஸ்கிருத எழுத்துக்கும் என்ன சம்பந்தம்?ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-85443852553777918212010-10-19T16:06:45.478+02:002010-10-19T16:06:45.478+02:00//இந்தியாவில் இந்து அடிப்படைவாத பி.ஜே.பி. ஆட்சிக்க...//இந்தியாவில் இந்து அடிப்படைவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டன.//
வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக கூறும் நீங்கள் வரலாறை திரிக்க முயலாதீர்கள்
http://en.wikipedia.org/wiki/Indo-Israeli_relations
இந்திய இஸ்ரேல் இராஜ தந்திர உறவுகள் 1992 லேயே அதாவது காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே தொடங்கி விட்டது. போகிற போக்கில் விஜயகாந்த் புள்ளி விவரங்கள் மாதிரி அடித்து விடாதீர்கள்.
அங்கே நீங்கள் இட்டுள்ள படிமம் கூட (ॐ ) மிகவும் முட்டாள் தனமானது அது இந்துத்துவ வெறியர்களின் சின்னம் தமிழர்கள் ஒம் என்ற தமிழ் அடையாளத்தை தான் பயன் படுத்துகிறார்கள்.
சும்மா ஏகாதிபத்தியம் கம்முநிசம் என்று வாய் சொல்லில் வீரம் பேசாதீர்கள் பின்பு நான் சாத்தியம் அற்றதையே தேர்ந்தெடுப்பேன் புரட்சி நிச்சயம் வரும் என்று வெட்டிதனமாக சவடால் விட வேண்டாம். நீங்கள் ஏகாதிபத்தியம் என்று நீட்டி முழங்கும் ஒரு நாட்டில் தான் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் ஞாபகம் இருக்கட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-52895428366706790232010-10-15T15:02:26.079+02:002010-10-15T15:02:26.079+02:00Jean said...
"I have a longtime doubt.
Do th...Jean said...
"I have a longtime doubt.
Do the brahmins of India are descendents of Jews ? There are some similarities in their lifestyles."
Pure ignorance. Brahmins of India are from all races.. depending on the region. It is just a terminology used for a group of people with certain traditional religious professions like temple duties, astrology and teaching. Recent trend of a couple of hundred years of marrying within themselves have created various mistaken notions.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-66626452921501735852010-10-08T08:20:12.368+02:002010-10-08T08:20:12.368+02:00//http://nilamellam.blogspot.com//
இந்தப் பதிவு ச...//http://nilamellam.blogspot.com//

இந்தப் பதிவு சொல்ல விரும்புவது என்ன? கொஞ்சம் யூதர்களின் நியாயத்தையும் நிறைய பலஸ்தீனர்களின் நியாயத்தையும் சொல்ல விரும்புகிறது. இந்த எழுத்தாளர்களுக்கு பல நூறு மைல் தொலைவிலிருக்கும் பிரச்சனை தெரியும் அளவிற்கு ஈழத்துப் பிரச்சனை தெரிவதில்லை. ஈழத்துப் பிரச்சனை பற்றி பலஸ்தீனியர்கள் கருத்து என்ன? புலிகள் யுத்தத்தில் தோற்றதும் சிறிலங்கா அரசுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள். இவர்களுக்கா தமிழர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள்? துருக்கி குர்திஸ் போராளிகளுக்காக குரல் கொடுங்கள். அவர்கள் நமக்காக குரல் கொடுத்தவர்கள். ஈழத்திலும் சிலசாரார் பலஸ்தீனுக்கு குரல் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர் பற்றி அக்கறையில்லை. ஆனால் நம் தமிழர்களுக்குத்தான் பலஸ்தீன் மீது காதல்!Rajannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-30826581706745237562010-10-07T11:44:05.983+02:002010-10-07T11:44:05.983+02:00தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு கருத்து எழுதியவர்க...தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு கருத்து எழுதியவர்கள் உங்களை போல் மொக்குத்தனமாக
பண்டைய வரலாறை எல்லாம் ஒப்பிடவில்லை.அவர்கள் ஒப்பிட்டது எல்லாம் தமிமிழர் பிரச்சினையும்
யூதர்கழிற்கு ஏற்பட்ட பிரச்சினையும் தான்.யூதர்கள் ஈழத் தமிழனைப்போல், தனது நாட்டை விட்டு அகதிகளாக்கப் பட்டு உலகெல்லாம் பரந்து வாழ்ந்தான். பின்னர் எல்லா யூதனும் ஒன்று சேர்ந்து தமக்கொரு நாட்டை கட்டியெழுப்பி
அதை வல்லரசுடன் சவால் விடும் அளவிற்கு குறுகிய காலப் பகிதியிலே மாற்றினான். இதே போல் நாமும் நமக்கொரு நாட்டை உருவாக்கலாம் என்பதற்காகவே யூதர்கழுடன் ஒப்பிடு கிறார்களே தவிர உங்களுடைய மொக்குத்தனமான ஒப்பீடு அல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-38974069657065645362010-10-07T06:45:17.351+02:002010-10-07T06:45:17.351+02:00யூதர்களின் நிலைமையும் இலங்கைத் தமிழர்களின் நிலைமைய...யூதர்களின் நிலைமையும் இலங்கைத் தமிழர்களின் நிலைமையும் ஒன்றெனக் கூறி முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்பி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் கயவர்களுக்குச் சரியான சாட்டையடி கொடுக்கிறீர்கள். நன்றி, கலையரசன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-28538847371609233482010-10-07T05:26:49.844+02:002010-10-07T05:26:49.844+02:00மிக சிரம பட்டு ஆதாரங்கள் திரட்டி சிந்தனைகளை வெளியி...மிக சிரம பட்டு ஆதாரங்கள் திரட்டி சிந்தனைகளை வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் எனக்கும். யூதத்தையும், தமிழினத்தையும் ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன? இது யாருக்கு ஏற்பட்டது? இதனால் அவர்கள் கண்ட...... அல்லது காணப்போகும் இலாபம் என்ன? ................. நிறைய யோசிக்க வேண்டியதாகிறது. உலகின் மானுட வாழ்வியல் பற்றி கிண்டிப் பார்த்தால்........, மகா மகா கேவலமாகத்தான் இருக்கிறது. ஒரு கோட்பாட்டை உயர்த்தி பிடிப்பதற்காக இன்னொரு உயிரை.. பலி வாங்குகிற எந்த விசயமும் உயர்வானது இல்லை. மனிதனாக நடக்கத் தெரியாத "மதவாத மிருகங்கள்" முதலில் மனிதம் தெரியட்டும். மனம் தெளியட்டும். மனிதனாய் இருக்க மதம் தேவை இல்லை. ஒருவராலும் இங்கே மதக் கோட்பாடுகளை பின்பற்ற முடியவில்லை. எல்லா தேசத்திலும் சட்டமும், மதமும் மனித வாழ்வியல் நிசத்தின் முன்னால் "தோற்றுப் போனதுதான் சரித்திரம் கண்ட உண்மை". காரணம் அவை இரண்டுமே உண்மைக்கு வெகு தொலைவில் நின்று கொண்டு மனிதனுக்கு "வழி"க் காட்டுகின்றன. ஒவ்வொரு தேசமும் ...... பிற தேசத்தின் சுதந்திரத்தை மறைமுகமாகவோ.., நேரடியாகவோ தாக்காமல் இருந்தால் இந்த உலகம் அமைதி அடையும். ...... அதுவரை...............!!!!!! ????? ......... இது போன்ற பதிவுகள் பதிக்கப் படும். நன்றி கலையரசன் உங்கள் உழைப்பிற்கு. வந்து போங்கள்.... ( ithayasaaral.blogspot.com )தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-74171329854178691562010-10-06T18:51:51.978+02:002010-10-06T18:51:51.978+02:00அன்புச் சகோதரர் கலையரசன் அவர்களே
உங்கள் மீது ஏக இ...அன்புச் சகோதரர் கலையரசன் அவர்களே

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

உங்களின் ஆக்கங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஆனால், இஸ்லாம் தொடர்பான சில விஷயங்களில் பிழை உள்ளது. அதற்க்கு காரணம்! மற்ற விஷயங்களை திறந்த மனதோடு படிக்கும் நீங்கள் இஸ்லாம் தொடர்பான விஷயங்களை மட்டும் சரியாக படிப்பது கிடையாது (அல்லது) திறந்த மனதுடன் படிக்காமல் கம்யூனிசம் என்ற கொள்கையை உங்கள் மனதில் வைத்துக்கொண்டு படிக்கின்றீர்கள் இதுவே உங்களின் எழுத்துக்களில் உள்ள இஸ்லாம் தொடர்பான பிழைகளுக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

இறைவன் இல்லை என்ற என்னத்தில் இருக்கும் உங்களிடம் இஸ்லாம் தொடர்பான தர்க்க ரீதியான விவாதம் செய்து இஸ்லாத்தை உங்களிடம் எடுத்துக் கூறுவது சரியான விடயம் அல்ல.

நீங்கள் உங்களுக்கும் எனக்கும் உள்ள பொதுவானவற்றின் பக்கம் வரவேண்டும். இஸ்லாமும் இஸ்லாமிய சட்டங்களும் அதன் கோட்பாடுகளும் எந்த விதத்தில் மனித குழத்திற்க்கு எதிராக செயல்படுகின்றது. இந்த வானம், பூமி, மேலும் அண்டசராசரங்கள், பிரபஞ்சங்கள் அனைத்தையும் படைத்தவன் யார். இவ்வாரு நீங்கள் சிந்திக்க வேண்டும். மேலும் இஸ்லாம் தொடர்பான சிறந்த நூல்களையும், குர்ஆனையும் திறந்த மனதுடன் படியுங்கள் தாங்கள் படிக்கவேண்டும்.

இப்படிக்கு
உங்கள் சகோதரன்அருளாளனின் அடிமைhttps://www.blogger.com/profile/00128698783924124326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-32261376715220699292010-10-06T16:49:38.469+02:002010-10-06T16:49:38.469+02:00I have a longtime doubt.
Do the brahmins of India ...I have a longtime doubt.
Do the brahmins of India are descendents of Jews ? There are some similarities in their lifestyles.Anonymoushttps://www.blogger.com/profile/05096225308107311155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-38905594311002795202010-10-05T16:58:01.907+02:002010-10-05T16:58:01.907+02:00பெரு மதிப்பிற்குரிய கலை அவர்களே
தங்களின் சமுதாயக்...பெரு மதிப்பிற்குரிய கலை அவர்களே
தங்களின் சமுதாயக்கண்ணோட்டம் மெய் சிலிர்க்க வைக்கிறது .
ஆனாலும்,"நுண் பொருள் காண்பது அறிவு"
என்ற கோட்பாட்டின்படி அடிப்படையில் நான் அந்த ஒப்பீடு ஆய்வுகளை நோக்குகிறேன்
யாவரும் அவ்வாறே பொருள் கொள்ளும்படி செய்த தங்களுடைய
பதிவிற்கு உலகத்தமிழினம் சார்பில் நன்றி
கிட்டுவின் மருமோன்கிட்டுவின் மருமோ(மக)ன்https://www.blogger.com/profile/16685592413278649727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-57780224494946072302010-10-05T13:50:21.863+02:002010-10-05T13:50:21.863+02:00//இந்தக் கட்டுரை இஸ்ரேலை பற்றியது மட்டுமே என்பதை ம...//இந்தக் கட்டுரை இஸ்ரேலை பற்றியது மட்டுமே என்பதை மீண்டும் ஒரு தடவை நினைவு படுத்த விரும்புகிறேன்.//

உங்கள் யூத எதிர்ப்பு இஸ்ரேலை பற்றி மட்டுமே எழுத தூண்டுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-52479127897690471572010-10-05T13:48:40.527+02:002010-10-05T13:48:40.527+02:00//முதலில் இஸ்ரேல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்ப...//முதலில் இஸ்ரேல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?//

ஒப்புக் கொள்கிறேன். அதற்காக ஒரு சாராரை மட்டும் விமர்சிப்பது அபத்தம். இந்தியா, சீனா, பாக்கிஸ்தான, ரஸ்யா, பிரித்ததானிய, அமெரிக்கா இன்னும் பல இலங்கை அரசுக்கு இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-22481053821319677562010-10-05T13:43:31.400+02:002010-10-05T13:43:31.400+02:00//ஈழத் தமிழர்கள் இலங்கை அரசை வெறுத்த அளவுக்கு இஸ்ர...//ஈழத் தமிழர்கள் இலங்கை அரசை வெறுத்த அளவுக்கு இஸ்ரேலையும் வெறுக்கின்றனர். போரினால் பாதிக்கப்படாத ஒரு சிலர் மட்டுமே புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு கண்மூடித் தனமாக இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள்.//

ஊகத்தின் அடிப்படையில் கருத்து வெளியிடாதீர்கள். நான் இலங்கையில் இருந்து கொண்டுதான் எழுதுகிறேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாமர மக்களுக்கு இஸ்ரலேல் பற்றியல்ல இந்தியா, சீனா பற்றிய கோபமே உள்ளது. இந்த நாட்டு நடப்பு பற்றி உங்களைவிட எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் போரின் தாக்கத்தில் வாழ்பவன் நான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-49967486001978740912010-10-05T13:38:45.819+02:002010-10-05T13:38:45.819+02:00//வெள்ளையர்களான ஐரோப்பிய யூதர்களும், கறுப்பர்களான ...//வெள்ளையர்களான ஐரோப்பிய யூதர்களும், கறுப்பர்களான ஆப்பிரிக்க யூதர்களும், இன்னும் அரேபிய யூதர்களும் ஒரே இனம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.//

DNA பகுப்பாய்வு பற்றி அறிந்து கொள்ளுங்கள். ethno-religious group பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63668583644971520962010-10-05T13:36:36.958+02:002010-10-05T13:36:36.958+02:00//நீங்கள் இங்கே கூறியுள்ளது தான் இனவாதக் கோட்பாடு....//நீங்கள் இங்கே கூறியுள்ளது தான் இனவாதக் கோட்பாடு. (Racist theory) ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமானது.//

இனங்களை மானிடவியலில் பகுப்பாய்வு செய்வது எப்படியென்பதை உங்களால் கூறமுடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-68024869093744071322010-10-05T13:33:02.272+02:002010-10-05T13:33:02.272+02:00//புள்ளிவிபரக் கணக்கை கொண்டு வாருங்கள். //
தேடிக...//புள்ளிவிபரக் கணக்கை கொண்டு வாருங்கள். //

தேடிக் கண்டுபிடியுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-58132287812028092602010-10-05T12:29:12.346+02:002010-10-05T12:29:12.346+02:00//மிக மேசமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் இந்தியா, சீன...//மிக மேசமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் இந்தியா, சீனா, உக்ரைன் போன்ற நாடுகளால் விநியோகிக்கப்பட்டன. உங்களுக்கு இஸ்ரேல் மட்டும் தெரிவது வினோதம்!//

இந்தக் கட்டுரை இஸ்ரேலை பற்றியது மட்டுமே என்பதை மீண்டும் ஒரு தடவை நினைவு படுத்த விரும்புகிறேன். மற்ற நாடுகளைப் பற்றி பிறகு பார்ப்போம். முதலில் இஸ்ரேல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-67367545577901551142010-10-05T12:21:38.864+02:002010-10-05T12:21:38.864+02:00//தமிழர்கள் ஒப்பிடுவது diaspora தவிர, யூதர்களுடைய ...//தமிழர்கள் ஒப்பிடுவது diaspora தவிர, யூதர்களுடைய மத, இன, காலச்சார ஒன்றுமைக்காக இல்லை. இது தெரிந்தும் நீங்கள் ஏன் விடயத்தை பெரிதுபடுத்துகிறீர்கள்?//

diaspora வை ஒப்பிடுவது கூட அபத்தமானது. இது குறித்து அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-91680812244873021992010-10-05T12:18:50.842+02:002010-10-05T12:18:50.842+02:00//80களில் புலிகள் இஸ்ரேலில் பயிற்சி பெற்றனர் என்பத...//80களில் புலிகள் இஸ்ரேலில் பயிற்சி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.//

இஸ்ரேலில் அதே கால கட்டத்தில், அதே முகாமில் இலங்கை இராணுவத்திற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இஸ்ரேலியர்கள் வெறும் பணத்திற்காக பயிற்சி வழங்கினார்கள், கொள்கைக்காக அல்ல. இலங்கை இராணுவத்திற்கு கிபீர் விமானங்களையும், ட்வோரா கப்பல்களையும் எப்படி இயக்குவது என்று இஸ்ரேலிய நிபுணர்களே பயிற்சி அளித்தார்கள். ஆரம்ப காலங்களில் இஸ்ரேலிய விமானிகள் விடுதலைப் புலிகளின் முகாம்களை தாக்கியுள்ளனர். இதனை அவர்கள் தமது நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளனர்.

//இஸ்ரேல் மீதுள்ள வெறுப்பினால் இஸ்ரேலை மகாமோசமாக தமிழர்களிடையே சித்தரிக்க முயலுகின்றீர்கள்.//

ஈழத் தமிழர்கள் இலங்கை அரசை வெறுத்த அளவுக்கு இஸ்ரேலையும் வெறுக்கின்றனர். போரினால் பாதிக்கப்படாத ஒரு சிலர் மட்டுமே புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு கண்மூடித் தனமாக இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56557734851096664052010-10-05T11:53:26.443+02:002010-10-05T11:53:26.443+02:00//யூதர்கள் இன-மதக் குழுவைச் (ethno-religious group...//யூதர்கள் இன-மதக் குழுவைச் (ethno-religious group) சார்ந்தவர்கள் Refer http://en.wikipedia.org/wiki/Ethnoreligious_group//

யூதர்கள் ஒரு இனம் என்ற தப்பெண்ணம் இன்று நேற்று தோன்றியதல்ல. இவை பெரும்பாலும் ஐரோப்பாவை மையப்படுத்திய கருத்தியல்கள்.
வெள்ளையர்களான ஐரோப்பிய யூதர்களும், கறுப்பர்களான ஆப்பிரிக்க யூதர்களும், இன்னும் அரேபிய யூதர்களும் ஒரே இனம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். உலகில் மனிதர்கள் எல்லாம் ஒரே இனம் என்று சொன்னால் மட்டுமே அது சாத்தியமாகும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-66420727228204871062010-10-05T11:43:37.800+02:002010-10-05T11:43:37.800+02:00அனானியாக பின்னூட்டமிடுபவர் ஒரே நபர் என்றே கருதுகிற...அனானியாக பின்னூட்டமிடுபவர் ஒரே நபர் என்றே கருதுகிறேன். அதனால் அனைத்துக்கும் சுருக்கமான பதிலைத் தர விரும்புகிறேன்.

//விகிதாசாரப்படி எந்த இனமும் யூதர்களின் பின்னால்தான் உள்ளன. //
புள்ளிவிபரக் கணக்கை கொண்டு வாருங்கள்.

//ஒவ்வொரு இனத்துக்கும் அல்லது இனக்குழுக்களுக்கும் DNA செல்வாக்கு செலுத்துகின்றது. நான் குறிப்பிடுவது வெறும் வரலாற்றுக் கதை அல்ல மானிடவியல்.//
நீங்கள் இங்கே கூறியுள்ளது தான் இனவாதக் கோட்பாடு. (Racist theory) ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமானது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-88398270582795087412010-10-05T10:32:59.484+02:002010-10-05T10:32:59.484+02:00//இஸ்ரேலிய தயாரிப்புகள் ஈழத்தில் பெருமளவு உயிரிழப்...//இஸ்ரேலிய தயாரிப்புகள் ஈழத்தில் பெருமளவு உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தன.//

இந்த பட்டியல்களை பாருங்கள் எந்தெந்த நாட்டு படைக்கலங்கள் இலங்கை அரசால் பாவிக்கப்பட்டன என்று. மிக மேசமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் இந்தியா, சீனா, உக்ரைன் போன்ற நாடுகளால் விநியோகிக்கப்பட்டன. உங்களுக்கு இஸ்ரேல் மட்டும் தெரிவது வினோதம்!

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Army#Equipment

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Navy#Current_Fleet

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Air_Force#Aircraft_InventoryAnonymousnoreply@blogger.com